கடைசி நேர தீபாவளி ஷாப்பிங்.. திணறிய திருச்சி NSB சாலை.. டுரோன் காட்சிகள்!
இந்தியா முழுவதும் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் ஒரு முக்கிய பண்டிகையாக தீபாவளி உள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னதாகவே தமிழகத்தில் தீபாவளி பண்டிகை கலைக்கட்ட தொடங்கியது. புத்தாடைகள் எடுப்பது, இனிப்புகளை வாங்குவது, பட்டாசுக்களை வாங்குவது என ஒரு மாதத்திற்கு மேலாக மக்கள் பிஸியாக ஷாப்பிங் செய்து வருகின்றனர்.
இந்தியா முழுவதும் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் ஒரு முக்கிய பண்டிகையாக தீபாவளி உள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னதாகவே தமிழகத்தில் தீபாவளி பண்டிகை கலைக்கட்ட தொடங்கியது. புத்தாடைகள் எடுப்பது, இனிப்புகளை வாங்குவது, பட்டாசுக்களை வாங்குவது என ஒரு மாதத்திற்கு மேலாக மக்கள் பிஸியாக ஷாப்பிங் செய்து வருகின்றனர். தீபாவளி பண்டிகையே வந்துவிட்டாலும் கூட பொதுமக்கள் இன்னும் ஷாப்பிங் செய்வதை நிறுத்தவில்லை. அந்த வகையில், திருச்சியில் உள்ள என்எஸ்பி சாலையில் கடைசி நேர ஷாப்பிங் செய்ய இரவு நேரத்தில் பொதுமக்கள் குவிந்ததால் அந்த பகுதி கூட்ட நெரிசல் மிகுந்து காணப்பட்டது. அதுமட்டுமன்றி, அந்த பகுதி முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. மிக நீண்ட சாலையில் மக்கள் கூட்டம் அலைமோதிய நிலையில், வாகனங்களும் படையெடுத்து நின்றுக்கொண்டு இருந்தன.
