Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
DMK

DMK

திமுக – தமிழகத்தில் 60 ஆண்டு காலமாக திராவிட கட்சிகள் தமிழகத்தை ஆட்சி செய்து வருகிறது. குறிப்பாக, திராவிட முன்னேற்ற கழகம் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்து வருகிறது. தற்போதும் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியில் உள்ளது. பெரியாரின் சமூக நீதிக் கொள்கையை முன்வைத்து அறிஞர் அண்ணாதுரை திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கினார். 1949ஆம் ஆண்டு அறிஞர் அண்ணாதுரை திராவிட முன்னேற்ற கழகம் எனும் கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கிய 15 ஆண்டுகளில் திராவிட முன்னேற்ற கழகம் மாநிலத்தின் ஆட்சியை கைப்பற்றியது. அதோடு, தேசிய கட்சிகள் எதுவும் மாநிலத்தை ஆட்சி செய்ய முடியாத நிலையை திராவிட முன்னேற்ற கழகம் ஏற்படுத்தியது. மேலும், திராவிட முன்னேற்ற கழகம் ஆளும் கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் முக்கிய பங்காற்றி இருக்கிறது. கட்சி தொடங்கியபோது, அண்ணாதுரை பொதுச் செயலாளராக இருந்த நிலையில், அவரது மறைவுக்கு பிறகு மு.க.கருணாநிதி கைக்கு கட்சி சென்றது. ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, 2018ல் மறைந்தார். அதன்பிறகு கட்சியின் பொறுப்பு மு.க.ஸ்டாலினிடம் சென்றது. அதன்பிறகு நடந்த 2021ஆம் ஆண்டு பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, தமிழக முதல்வரானார் மு.க.ஸ்டாலின். திமுக தொடர்பான செய்திகளை நாம் இந்த தொகுப்பில் காணலாம்.

Read More

“கொஞ்சமா பெய்த மழைக்கே இவ்வளவு தண்ணீர்”.. திமுகவை சரமாரியாக சாடிய விஜய்!!

கடந்த 3 நாட்களாக சென்னையில் பெய்து வரும் கனமழைக்கே நகரின் முக்கியப் பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. குறிப்பாக வடசென்னையில் மழை நீர் தேக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால், அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மழை நீர் தேங்கியது குறித்து விஜய் குரல் எழுப்பியுள்ளார்.

தொடங்கியது கூட்டணி பேச்சுவார்த்தை.. முதல்வர் ஸ்டாலினை சந்தித்த காங்கிரஸ் ஐவர் குழு!!

2026 assembly election: தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தற்போது அரசியல் கட்சிகளின் செயல்பாடு தீவிரமெடுத்துள்ளது. அந்தவகையில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தங்களது கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளன. அடுத்தடுத்து டிசம்பர் மாத இறுதிக்குள் பல்வேறு கட்சிகளும் தங்களது கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக நிர்வாகி துப்பாக்கியால் சுட்டுக் கொலை.. சேலம் அருகே பரபரப்பு!!

திமுக நிர்வாகி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், சர்வ சாதாரணமாக துப்பாக்கி பயன்படுத்தும் அளவுக்கு தமிழ்நாடு மோசமான நிலைக்கு சென்றுவிட்டதா என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும், எப்படியும் இங்கு சாதாரணமாக படுகொலை செய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டதாகவும் விமர்சித்துள்ளார்.

கூட்டணியை இறுதி செய்ய தயாராகும் காங்கிரஸ்; திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைப்பு!

வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் திமுக அல்லது தவெக யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற சலசலப்பு நீண்ட நாட்களாக எழுந்து வருகிறது. இதற்கு முடிவு கட்டும் விதமாக திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை மேற்கொள்ள ஒருங்கிணைப்பு குழுவை தேசிய தலைமை அமைத்துள்ளது. எனினும், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படுமா என்பது தெரியவில்லை.

ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பு.. டி.கே.எஸ். இளங்கோவன் ஆதரவு!

ஆளுநர்கள் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நல்ல தீர்ப்பு என்று கூறிய திமுகவை சேர்ந்த டி.கே.எஸ். இளங்கோவன், “அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகளுக்கு முரணான எதையும் தமிழ்நாடு ஆளுநர் கண்டறிந்தால், ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கங்களை கேட்கலாம். ஆனால், எந்த மசோதாவையும் மறுக்க முடியாது. இந்த மசோதாவை நிறைவேற்ற முடியாது என்று தமிழ்நாடு ஆளுநர் கூற முடியாது. அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை” என்றார்.

“SIR படிவத்தை பார்த்தாலே தலை சுற்றுகிறது”.. முதல்வர் ஸ்டாலின்!!

மத்திய அரசு, தேர்தல் ஆணையம் கொடுக்கும் அழுத்தத்தை மீறி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதோடு, வழக்கமாக கட்சியை வெற்றி பெற வைக்கும் பணி மட்டுமே நிர்வாகிகளுக்கு இருக்கும், இம்முறை, மக்களுடைய வாக்குரிமையைப் பெற்றுத் தரும் பொறுப்பும் கூடுதலாக உள்ளதாக கூறியுள்ளார்.

நம் முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை.. எஸ்ஐஆர் குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட முதல்வர்!

CM MK Stalin Wrote About SIR | தமிழகத்தில் இன்று வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தை எதிர்த்து திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், எஸ்ஐஆர் தடுப்பதே நம் முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார்.

SIR-க்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள திமுக கூட்டணி கட்சிகள்!

DMK Alliance Protest Against SIR | தீவிர வாக்காளர் திருத்த பட்டியல் பணியை இந்திய தேர்தல் ஆணையம் கையில் எடுத்துள்ளது. இந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணி கட்சிகள் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

டெல்லி பிக்-பாஸிற்கு ஆமாம் சாமி போடும் எடப்பாடி பழனிசாமி – முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..

CM MK Stalin Speech: எஸ்.ஐ.ஆருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்துள்ளது. அதில் தங்களையும் இணைத்து கொள்ள வேண்டும் என அதிமுகவும் மனு தாக்கல் செய்துள்ளார்கள். உண்மையான அக்கறை இருந்தால் அவர்கள் ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

12,753 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை.. Total Failure மாடல் அரசு – எடப்பாடி பழனிசாமி காட்டம்..

Edappadi Palniswami: தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ரேஷன் கடைகளில் தற்போது கோதுமை விநியோகம் செய்யப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உடனடியாக கோதுமை ரேஷன் கடைகளுக்கு சென்று சேர்வதை உறுதி செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்: இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!!

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் தங்களை ஈடுபடுத்தி கொண்டு வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்கள் முறையாக சென்று சேருவதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, நிர்வாகிகள் தேர்தல் அலுவலர்களோடு களத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடவும் அறிவுறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுகவை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது – முதலமைச்சர் ஸ்டாலின்..

CM MK Stalin: இன்றைக்கு யார் யாரோ கிளம்பியுள்ளனர்; திமுகவை அழித்து விடலாம் என நினைக்கின்றனர், ஒழித்து விடலாம் என கனவு காண்கின்றனர். இந்த இயக்கத்தை தொட்டுக் கூட பார்க்க முடியாது என சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

எஸ்ஐஆர் திட்டத்திற்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்பாட்டம் – திமுக அறிவிப்பு

SIR Scheme : இந்திய தேர்தல் ஆணையம் எஸ்ஐஆர் என்ற பெயரில் தமிழகத்தில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் இந்த பணிகளுக்கு எதிராக திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் மாபெரும் கண்டன ஆர்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்.. திமுகவை கடுமையாக விமர்சித்த தவெக தலைவர் விஜய்!

மாமல்லபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் பேசிய நடிகர் விஜய், “கரூர் சம்பவத்திற்கு பிறகு அவசர அவசரமாக ஒரு தனி நபர் ஆணையம் அமைத்தது தமிழ்நாடு அரசு. இந்த தனிநபர் ஆணையத்தையே அவமதிப்பது போல், தமிழ்நாடு அரசு உயர் அதிகாரிகள், காவல் துறை உயர் அதிகாரிகள் என அனைவரையும் ஒன்றிணைத்து ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தினர். இவை எல்லாம் ஏன் நடக்கிறது எதற்காக நடக்கிறது? என்று ஒட்டுமொத்த தமிழக மக்களும் கேள்வி எழுப்ப தொடங்கினார்கள் என இதையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறந்துவிட்டாரா?”என கேள்வி எழுப்பினார்.

Karur Stampede: கரூர் நெரிசலுக்கு காரணம் திமுகவின் அலட்சியமா? தவெகவின் முதிர்ச்சியற்ற திறனா? விரிவான பார்வை!

2025 Karur Crowd Crush: கரூர் கூட்ட நெரிசலை தொடர்ந்து வேகவேகமாக நடந்த பிரேத பரிசோதனைகள், அவசர இறுதி சடங்குகள் மற்றும் சம்பவ இடத்தில் நடந்த மின்வெட்டுகள் என பல விஷயங்கள் மூடிமறைக்க முயற்சிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பலரும் கூறி வருகின்றன.