AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

India Playing XI: சறுக்கும் நம்பர் 1 வீரர்கள்.. வெளியேற்றப்படுவார்களா அபிஷேக், வருண் சக்கரவர்த்தி?

India vs New Zealand Final: தற்போதைய உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா மற்றும் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தியை நினைத்து இந்திய அணி நிர்வாகமும், இந்திய ரசிகர்களும் கவலை கொள்கின்றனர். கடந்த ஒருசில போட்டிகளில் சொதப்பிய நம்பர் 1 தரவரிசையில் உள்ள இரு இந்திய வீரர்களையும் அணி நிர்வாகம் நீக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

India Playing XI: சறுக்கும் நம்பர் 1 வீரர்கள்.. வெளியேற்றப்படுவார்களா அபிஷேக், வருண் சக்கரவர்த்தி?
அபிஷேக் சர்மா - வருண் சக்கரவர்த்திImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 07 Mar 2026 16:54 PM IST

நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களமிறங்கிய இந்திய அணி, 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியிலும் தனது இடத்தை உறுதி செய்தது. நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி (Indian Cricket Team) வெற்றிபெற்றால், டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 3வது முறையாகவும், தொடர்ச்சியாக 2வது முறையாகவும், சொந்த மண்ணில் கோப்பையை வென்ற முதல் அணி என்ற பெருமையை படைக்கும். முன்னதாக, அரையிறுதி போட்டிகளில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணியும், இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இரு அணிகளுக்கு இடையேயான டி20 உலகக் கோப்பை (2026 T20 World Cup) இறுதிப்போட்டி நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நாளை அதாவது 2026 மார்ச் 8ம் தேதி ஒரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

ALSO READ: இந்தியா vs நியூசிலாந்து டி20 உலகக் கோப்பை பைனல்.. களமிறங்கும் அம்பயர் லிஸ்ட் ரெடி!

சொதப்பும் டி20 நம்பர் 1 தரவரிசை வீரர்கள்:

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி லீக் ஸ்டேஜ், சூப்பர்8 மற்றும் அரையிறுதியில் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணி வெற்றி பயணத்திற்கு காரணமாக அமைந்தது. தற்போதைய உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா மற்றும் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தியை நினைத்து இந்திய அணி நிர்வாகமும், இந்திய ரசிகர்களும் கவலை கொள்கின்றனர். கடந்த ஒருசில போட்டிகளில் சொதப்பிய நம்பர் 1 தரவரிசையில் உள்ள இரு இந்திய வீரர்களையும் அணி நிர்வாகம் நீக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அபிஷேக் சர்மா:

ஐசிசி டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அபிஷேக் சர்மா 2026 டி20 உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக மூன்று முறை டக் அவுட்டானார். இது மட்டுமின்றி, உடல் நிலை சரியில்லாமல் போனதால, நமீபியாவுக்கு எதிராக குரூப் ஸ்டேஜ் போட்டியில் விளையாடவும் இல்லை. அதன்படி, அபிஷேக் சர்மா இதுவரை டி20 உலகக் கோப்பையில் 6 போட்டிகளில் விளையாடி ஒரு அரைசதம் உள்பட வெறும் 89 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா ஆஃப்-ஸ்பின்னர்களுக்கு எதிராக தொடர்ந்து அவுட்டாகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் அபிஷேக் சர்மா நீக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரத்தில், பார்ம் அவுட் காரணமாக வெளியில் உட்கார வைக்கப்பட்ட சஞ்சு சாம்சன், பார்முக்கு திரும்பி 97 நாட் அவுட் மற்றும் 89 ரன்கள் எடுத்தார். 2026 டி20 உலகக் கோப்பையில் 4 போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்தாலும், ‘தொடர் ஆட்டநாயகன்’ 8 பேர் கொண்ட பரிந்துரை பட்டியலில் சாம்சன் இப்போது உள்ளார்.

ALSO READ: நியூசிலாந்து அணிக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோர்.. இந்தியாவின் கடந்த கால சாதனைகள்!

வருண் சக்கரவர்த்தி நிலைமை என்ன..?

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றவுள்ள இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் 1 பந்துவீச்சாளர் வருண் சக்ரவத்தியை நீக்குவது குறித்து இந்திய அணி நிர்வாகம் யோசிக்கலாம். 2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் வருண் சக்கரவர்த்தி முதலிடத்தில் உள்ளார். இருப்பினும், இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதியில் வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்கள் பந்துவீசி 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தி 64 ரன்களை விட்டுகொடுத்தார். இது டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய பந்துவீச்சாளர் ஒருவர் விட்டுகொடுத்த அதிகபட்ச ரன்னாகும்.

ஒருவேளை வருண் சக்கரவர்த்தி நீக்கப்பட்டால் அமெரிக்காவிற்கு எதிரான போட்டியின் தொடக்க ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது சிராஜூக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

Follow Us