AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தமிழகத்தில் ரூ.1,427 கோடி மணல் கொள்ளை? முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட 28 பேர் மீது டி.வி.ஏ.சி. வழக்குப்பதிவு!

மணல் குவாரிகளுக்கான ஒப்பந்தங்களை வழங்கும்போது முறையான திறந்தவெளி ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும், குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களுக்குச் சாதகமாக ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், அரசு அனுமதித்த அளவு மற்றும் எல்லைகளை மீறி ஆற்று மணல் அகழ்வு செய்யப்பட்டதாகவும், சட்டவிரோதமாக மணல் எடுத்துச் செல்ல போலி அனுமதிச் சீட்டுகள் தயாரிக்கப்பட்டு அரசு ஆவணங்களில் பயன்படுத்தப்பட்டதாகவும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ரூ.1,427 கோடி மணல் கொள்ளை? முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட 28 பேர் மீது டி.வி.ஏ.சி. வழக்குப்பதிவு!
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 17 Nov 2026 21:52 PM IST

நவம்பர் 17, 2026: தமிழகத்தில் ஆற்று மணல் குவாரிகளில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக, முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட 28 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை (டி.வி.ஏ.சி.) வழக்குப்பதிவு செய்துள்ளது. இதில் 18 அரசு அதிகாரிகள் மற்றும் 10 தனியார் நபர்கள் இடம்பெற்றுள்ளனர். நான்கு மணல் குவாரிகளில் மட்டும் சட்டவிரோதமாக 1.42 கோடி யூனிட் மணல் அள்ளப்பட்டதால், அரசுக்கு ரூ.1,427.34 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை அறிக்கையைத் தொடர்ந்து விசாரணை

கடந்த 2021 முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்ட மணல் குவாரிகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமிழக காவல்துறை தலைமை இயக்குநருக்கு அமலாக்கத்துறை அறிக்கை அனுப்பியது.

மேலும் படிக்க: கடன் பிரச்னை, ஆடம்பர வாழ்க்கைக்காக தனிஷ்க் நகைக்கடையில் கொள்ளை! யூடியூபர் நிஷாந்த் குறித்து காவல் ஆணையர் பரபரப்பு தகவல்

இதையடுத்து, தமிழக அரசின் அனுமதியுடன் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையைத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக, தற்போது முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட 28 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒப்பந்தங்களில் முறைகேடு; அனுமதியின்றி மணல் அகழ்வு

மணல் குவாரிகளுக்கான ஒப்பந்தங்களை வழங்கும்போது முறையான திறந்தவெளி ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும், குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களுக்குச் சாதகமாக ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், அரசு அனுமதித்த அளவு மற்றும் எல்லைகளை மீறி ஆற்று மணல் அகழ்வு செய்யப்பட்டதாகவும், சட்டவிரோதமாக மணல் எடுத்துச் செல்ல போலி அனுமதிச் சீட்டுகள் தயாரிக்கப்பட்டு அரசு ஆவணங்களில் பயன்படுத்தப்பட்டதாகவும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நான்கு குவாரிகளில் மட்டும் ரூ.1,427 கோடி இழப்பு?

குறிப்பாக, ஏச்சம்பாடி, கந்தனேரி, மாதவப்பெருமாள் கோவில், ஒருவந்தூர் ஆகிய நான்கு மணல் குவாரிகளில் மட்டும் சுமார் 1.42 கோடி யூனிட் மணல் சட்டவிரோதமாக அகழ்வு செய்யப்பட்டதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசுக்கு ரூ.1,427.34 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: தோனிக்கு பிரியாவிடை கொடுக்க ஒரு வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும்! – மு.க.ஸ்டாலின் உருக்கம்

மீதமுள்ள 24 குவாரிகளில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் அதனால் ஏற்பட்ட இழப்பு தொடர்பான விவரங்கள், விசாரணைக்குப் பிறகே முழுமையாகத் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை

இந்த விவகாரத்தில் ஊழல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முதல் தகவல் அறிக்கை சென்னையில் உள்ள ஊழல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசின் மணல் வள மேலாண்மை, குவாரி ஒப்பந்தங்கள் மற்றும் அரசு வருவாய் தொடர்பான இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்திலும் கவனத்தைப் பெற்றுள்ளது. இருப்பினும், முன்னாள் அமைச்சர் உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளின் மூலமே உறுதிப்படுத்தப்பட வேண்டும். வழக்கின் அடுத்தகட்ட விசாரணையில் மேலும் பல தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us