Karthigai Deepam - கார்த்திகை தீபம்
கார்த்திகை தீபத் திருவிழா என்பது தமிழர்களின் பழமையான மற்றும் புனிதமான திருவிழாக்களில் ஒன்றாகும். தீபாவளி முடிந்து அடுத்த சில வாரங்களில் கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. சிவன் மற்றும் முருகன் வழிபாட்டிற்கு முக்கியமானதாக கருதப்படும் இந்நாளில், தீமையின் இருளைப் போக்கி, நன்மை எனும் வெற்றியை (தெய்வீக ஒளியை) பெறுவதாக நம்பப்படுகிறது. கார்த்திகை தீபம் அன்று வீடுகளில் அகல்விளக்குகள் ஏற்றப்பட்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதேபோல திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மலை உச்சியில் பிரம்மாண்ட நெய் தீபம் ஏற்றப்படும். கார்த்திகை மாதம் முழுவதும் வீடுகள் மற்றும் கோயில்கள் எண்ணெய் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, பக்தி சூழல் நிறைந்து ஒளியால் மிளிர்கிறது.