Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

11 நாட்கள் காட்சி தரும் திருவண்ணாமலை கார்த்திகை தீபம்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா என்பது வெறும் திருவிழா அல்ல, “சிவனின் ஜோதியை நேரில் காணும் மிக உயர்ந்த ஆன்மிக அனுபவம்” என பக்தர்கள் நம்புகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத் திருவிழாவில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பது இதன் பெருமையை நிரூபிக்கிறது.

11 நாட்கள் காட்சி தரும் திருவண்ணாமலை கார்த்திகை தீபம்!
திருவண்ணாமலை மகா தீபம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 01 Dec 2025 16:39 PM IST

திருவண்ணாமலை, டிசம்பர் 01: திருவண்ணாமலை என்றாலே முதலில் நினைவுக்கு வருவது அருணாசலேஸ்வரர் கோவிலும், கார்த்திகை தீபமும்தான். ஆண்டுதோறும் திருவண்ணாமலையில் கார்த்திகை மாதத்தில் 10 நாட்கள் கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது. இது, தமிழ் ஆன்மிக மரபில் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்றாகவும், சிவபெருமான் அருளை நேரடியாக உணரும் புனித தருணமாகவும் கருதப்படுகிறது. இந்த தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கருதப்படும் பரணி தீபம் அதிகாலை 4 மணிக்கு ஏற்றப்படுகிறது. இது தீபத்திருவிழாவின் ஆன்மிகத் துவக்கமாகக் கருதப்படுகிறது. 7 அடி உயரம் கொண்ட செப்புக்கொப்பரையில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்காக சுமார் ஆயிரம் கிலோ நெய்யும், ஆயிரம் மீட்டர் காடா துணியும் (பஞ்சு துணி) பயன்படுத்தப்படுகிறது.

மேலும் படிக்க: புயல் வலுவிழந்தாலும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மழை தொடரும்.. வெதர்மேன் பிரதீப் ஜான் சொன்ன தகவல்..

11 நாட்கள் காட்சி தரும் தீபம்:

கார்த்திகை தீபம் ஏற்றும்போது திருவண்ணாமலையில் மலை உச்சியை நோக்கி அரோகரா, அரோகரா எனக்கூறி தீபத்தை வணங்குவது இறைவனை நேரில் தரிசனம் செய்வதற்கு ஒப்பானதாக கருதப்படுகிறது. திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட்டதற்கு பின்னர், தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் தங்கள் வீடுகள், கடைகள், நிறுவனங்களிலும் தீபம் ஏற்றி வணங்கி மகிழ்வார்கள். பலர் தாங்கள் நிற்கும் இடங்களிலேயே தேங்காய் உடைத்து தீபம் ஏற்றி வணங்குவார்கள். திருக்கார்த்திகை தினத்தன்று ஏற்றப்படும் மகா தீபமானது 11 நாட்கள் தொடர்ந்து எரியும். முதல் நாளில் திருவண்ணாமலைக்கு செல்ல இயலாத பக்தர்கள் அடுத்தடுத்த நாட்களில் தீப தரிசனம் செய்யலாம். திருவண்ணாமலை தீப ஒளியானது சுமார் 20 கி.மீ. தொலைவுக்குத் தெரியும்.‌

நாளை மறுநாள் மகா தீபம்:

11 நாட்கள் நிறைவடைந்த பின்னர் தீப கொப்பரை எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். இதைத் தொடர்ந்து ஆயிரம் கால் மண்டபத்தில் தீப கொப்பரை பாதுகாப்பாக வைக்கப்பட்டு ஆருத்ரா தரிசனம் நாளில் நடராஜ பெருமானுக்கு திலகமிடப்பட்ட பின்னர் பிரசாதமாக வழங்கப்படும். இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் நாளை மறுநாள் (3.12.2025) மாலையில் ஏற்றப்படுகிறது.

40 லட்சம் பக்தர்கள் வருகை:

மகா தீபத்தை காண சுமார் 40 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, தமிழக அரசு, போலீசார் மற்றும் கோவில் நிர்வாகம் பெரிய அளவில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அனைத்து வழித்தடங்களிலும் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், கோவில் நடைபாதைகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. மேலும் மலைக்கு செல்லும் ‘கிரிவலம்’ பாதையில் பக்தர்கள் அதிகமாக இருக்கும் காரணத்தால் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

Also read: சென்னையில் காலை முதல் பலத்த மழை.. தவித்த பள்ளி மாணவர்கள்!!

பலத்த போலீஸ் பாதுகாப்பு:

கார்த்திகை மாதத்தில் திருவண்ணாமலையில் சராசரியாக தினமும் 3 முதல் 5 லட்சம் பக்தர்கள் வருவது வழக்கம். தீபத்திருவிழா சமயத்தில் 3000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடத்தப்படுகின்றனர். தொடர்ந்து, அங்கு மருத்துவ உதவிக்காக 108 ஆம்புலன்ஸ்கள், தற்காலிக மருத்துவ மையங்கள் நிறுவப்பட்டு வருகின்றன.