வாட்ஸ்அப் மெசேஜ்களை மட்டும் அடிப்படையாக கொண்டு விவாகரத்து வழங்க முடியாது என்று மும்பை உயர்நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. நாசிக் குடும்ப நீதிமன்றம் வழங்கிய விவாகரத்து உத்தரவை எதிர்த்து ஒரு பெண் மேல்முறையீடு செய்த வழக்கை விசாரித்த போது இந்த கருத்தை உயர்நீதிமன்றம் தெரிவித்தது. இந்த வழக்கில் கணவர் தனது மனைவி மீது மன உளைச்சல் ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டி, வாட்ஸ்அப் மற்றும் எஸ்எம்எஸ் உரையாடல்களை ஆதாரமாக வைத்து குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து கோரினார்.