சென்னையில் காலை முதல் பலத்த மழை.. தவித்த பள்ளி மாணவர்கள்!!
Chennai rain: காலை முதல் விடாமல் சாரல் மழையும், அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருவதால், பள்ளி மாணவர்கள் விடுமுறை கிடைக்காத என்று தவித்தனர். எனினும், அவ்வாறு எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால், கொட்டும் மழையில் குடைகளை பிடித்தப்படி மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்றனர்.
சென்னை, டிசம்பர் 1: சென்னை நகர் முழுவதும் காலை முதல் விட்டு விட்டு சாரல் மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. காலை முதல் வானம் மேகமூட்டத்துனட் காணப்படும் நிலையில், அவ்வப்போது கனமழை பெய்து பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை எம்.ஆர்.சி.நகர், பட்டினப்பாக்கம், மெரினா, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, நந்தனம், தி.நகர், அடையாறு, கிண்டி, நுங்கம்பாக்கம், அண்ணாநகர் உள்ளிட்ட நகரத்தின் உட்பகுதிகளிலும், கொளத்தூர், அம்பத்தூர், கொரட்டூர் உள்ளிட்ட நகரத்தின் வெளிப்புரத்திலும் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இன்று திங்கட்கிழமை வேலை நாள் என்பதால் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்வோர் கடும் அவதியடைந்துள்ளனர். முக்கிய சாலைகளிலும் தண்ணீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிக்க : “இலங்கைக்கு துணை நிற்க தமிழ்நாடு தயார்”.. முதல்வர் ஸ்டாலின் உறுதி !!
கடந்த 2 நாட்களில் இல்லாத மழை:
கடந்த இரண்டு நாட்களாக தித்வா புயல் தீவிரமாக இருந்ததால், தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. குறிப்பாக சனிக்கிழமையன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தது என பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இதனிடையே, நேற்று காலை முதல் வட தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் தித்வா புயல் வலுகுறைந்தது. இந்நிலையில், இன்று காலை முதல் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.




விடுமுறைக்காக தவித்த பள்ளி மாணவர்கள்:
குறிப்பாக, வாரத்தின் முதல் நாளான இன்று பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், அலுவலகம் செல்வோர் என நகரம் வழக்கமாகவே பரபரப்பாக காணப்படும். இந்நிலையில், காலை முதல் விடாமல் சாரல் மழையும், அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருவதால், பள்ளி மாணவர்கள் விடுமுறை கிடைக்காத என்று தவித்தனர். எனினும், அவ்வாறு எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால், கொட்டும் மழையில் குடைகளை பிடித்தப்படி மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்றனர்.
வலுகுறைந்த தித்வா புயல்:
வங்கக்கடலில் நிலவிய தித்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுகுறைந்தது. இது இன்று காலை மேலும் வலுகுறையக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. நேற்று தித்வா புயல் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழகம்–புதுச்சேரி கடலோர பகுதியில், சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 180 கி.மீ தொலைவில் இருந்தது. அந்த நேரத்தில் புயல் மற்றும் வடதமிழக கரைக்கு இடையேயான குறைந்தபட்ச தூரம் 70 கி.மீ பதிவானது. பின்னர், கரையை ஒட்டி வடக்குத் திசையில் நகர்ந்த தித்வா புயல், சென்னைக்கு 140 கி.மீ. தூரத்தை எட்டியபோது, அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுகுறைந்தது.
இதையும் படிக்க : ஆபத்தில் ஓடியவர்கள், “தவெக குறித்து மக்கள் முடிவெடுப்பார்கள்”.. சபாநாயர் அப்பாவு தாக்கு!!
12 மணி நேரத்தில் வலுவிழக்கும்:
தொடர்ந்து, இன்று சென்னைக்கு 50 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (தித்வா புயல்) மையம் கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது 10 கி.மீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. அதோடு, அடுத்து 12 மணி நேரத்தில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கக் கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.
மெரினாவில் தொடரும் தடை:
சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல 2வது நாளாக தடை தொடர்கிறது. பலத்த சூறைக்காற்று, கடல் சீற்றம் காரணமாக கடற்கரைக்குச் செல்ல காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். அதோடு, பொதுமக்கள் கடற்கரைக்கு செல்லாத வகையில் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.