மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரக்கூடும் என்ற அச்சம் காரணமாக நாடு முழுவதும் பல இடங்களில் பெட்ரோல் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் 2 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்ததால், எதிர்காலத்தில் எரிபொருள் விலை உயரக்கூடும் என்ற கவலை மக்களிடம் ஏற்பட்டுள்ளது.