AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழக சட்டமன்ற தேர்தல் எப்போது தெரியுமா? இந்த தேதியில் வெளியாகிறது அறிவிப்பு!

Tamil Nadu Assembly Election Date: தமிழகம் உள்பட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதி மற்றும் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் தேதி தெரியவந்துள்ளது. அதன்படி, அதற்கான அதிகாரப்பூர்வு அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் இன்னும் சில நாள்களில் வெளியிட உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் எப்போது தெரியுமா? இந்த தேதியில் வெளியாகிறது அறிவிப்பு!
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 10 Mar 2026 09:31 AM IST

தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தலில் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் முன்னேற்பாடுகளுக்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான குழு மாநிலம் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு உயர் அதிகாரிகளிடம் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டது. இந்த பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் தேர்தல் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகள் உள்பட 5 மாநிலங்களிலும் மொத்தம் உள்ள 824 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்துவதற்கான பணிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாளை புதன்கிழமை ( மார்ச் 11) தமிழகம் மற்றும் கேரளத்துக்கு வருகை தர உள்ளார்.

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு

அவர் சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு டெல்லி திரும்பிய பிறகு 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதன்படி, வருகிற மார்ச் 15- ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தேர்தல் தேதியை அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ஏப்ரல் மாதம் 23- ஆம் தேதி ( வியாழக்கிழமை) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க: V. Senthil Balaji Tamil Nadu Election: கட்சி மாற்றம்.. சிறைவாசம்.. தொடர் வெற்றியை வசமாக்குவாரா செந்தில்பாலாஜி?

பிரதமர் டெல்லி திரும்பியவுடன் தேர்தல் தேதி அறிவிப்பு

பிரதமர் நரேந்திர மோடி தமிழக மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துவிடும். இதன் காரணமாக, பிரதமர் நரேந்திர மோடி தனது சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு திரும்பியவுடன், 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் ஆளும் திராவிட முன்னேற்ற கழக அரசின் பதவிக்காலம் மே 10- ஆம் தேதியுடன் நிறைவடை உள்ளது.

பதவி காலம் முடிவடையும் 5 மாநில அரசுகள்

இதே போல, புதுச்சேரியில் ஆளும் என். ஆர். காங்கிரஸ் பதவி காலம் ஜூன் 15-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. மேற்கு வங்காளத்தில் ஆளும் அரசுக்கு மே 7-ஆம் தேதியும், அசாமில் ஆளும் அரசுக்கு மே 20- ஆம் தேதியும், கேரள மாநிலத்தில் ஆளும் அரசுக்கு மே 23- ஆம் தேதியும் பதவிக்காலம் நிறைவடைகிறது. இதன் பின்னர் சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறும் கட்சி புதிதாக ஆட்சியை அமைக்க உள்ளது. இந்த தேர்தலுக்காக 5 மாநிலங்களை சேர்ந்த அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

மேலும் படிக்க: Villivakkam Constituency Election 2026: 5 முறை வெற்றிப்பெற்ற திமுக.. இம்முறையும் வில்லிவாக்கம் தொகுதியில் வெற்றி கிடைக்குமா?

Follow Us