திருச்சியில் பட்டாசு கடையில் திடீர் தீ விபத்து.. வெடித்துச் சிதறிய பட்டாசுகள்! ரூ.5 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் நாசம்!
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் தீபாவளியை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பட்டாசு கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாநகர் எடமலைப்பட்டி புதூர் பகுதியில் இன்று மாலை இந்த தீ விபத்து நிகழ்ந்தது. தீ மளமளவென பரவியதால் கடையில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறின. இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் சத்தம் கேட்டது. அச்சமடைந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து நாசமாகின. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்துக்கான காரணம் குறித்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.