Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Weather Forecast

Weather Forecast

காலநிலை மாற்றத்தால் உலக நாடுகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறது. அதீத மழை, வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்களை சந்தித்து வருகிறது. அதில் இந்தியா விதிவிலக்கு அல்ல. இந்தியாவில் ஒவ்வொரு இடத்திலும் வானிலை என்பது மாறிக்கொண்டே இருக்கும். உதாரணமாக, ஜம்மு காஷ்மீரில் வெயில் என்பதை பார்க்கவே முடியாது. அதே நேரத்தில் சென்னையை எடுத்துக் கொண்டால் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். எனவே, அந்தந்த இடத்திற்கு ஏற்ப வானிலை என்பது இருக்கும். இதற்கு காரணம் வளிமண்டலத்தின் நடக்கும் மாற்றம் தான். வளிமண்டலத்தில் நடக்கும் மாற்றங்கள் காரணமாக, கனமழையும், அதீ கனமழையும் பெய்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை மார்ச் முதல் ஜூன் வரை கோடை வெயில் இருக்கும். ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் முதல் ஜனவரி வரை வடகிழக்கு பருவமழையும் இருக்கும். இதற்கிடையில், டிசம்பர் முதல் பிப்ரவரி வரை பனிப்பொழிவு இருக்கும். இதனால், அதற்கு ஏற்றவாறு வானிலை அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. எனவே, வானிலை தொடர்பான அறிவிப்புகளை இங்கு தொடர்ந்து பதிவிடப்படும். இதனை பார்த்து தெரிந்து கொள்ளலாம்

Read More

தமிழகம் முழுவதும் மாறும் வானிலை: மழையும், வெப்பமும் இருக்கும்…

Rain and Heat Alert for Tamil Nadu: தமிழகத்தில் 2025 ஜூலை 12 இன்று மற்றும் 13 ஆம் தேதி நாளை இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. 2025 ஜூலை 15 முதல் 17 வரை நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யலாம். சில பகுதிகளில் வெப்பநிலை 100°F தாண்டி அதிகரித்து, மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கொளுத்தும் வெயில்.. 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவாகும் வெப்பநிலை..

Tamil Nadu Weather Update: தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை என்பது இரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்த காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் அதிகப்படியான வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் காரணமாக ஒரு சில பகுதிகளில் அசவுகரியம் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுட்டெரிக்கும் சூரியன்.. 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என எச்சரிக்கை..

Tamil Nadu Weather Update: தமிழ்நாட்டில் தென் மேற்கு பருவ மழையின் தீவிரம் குறைந்துள்ள நிலையில், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலை அதிகபட்ச வெப்பநிலை என்பது இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து பதிவாக்ககூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது,

சுட்டெரிக்கும் சூரியன்.. 12 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவான வெப்பநிலை..

Tamil Nadu Weather Update: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்த வரையில், அதிகபட்ச வெப்பநிலை என்பது 39 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், ஜூலை 9, 2025 தேதியான இன்று சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 39.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

தமிழ்நாடு வானிலை நிலவரம்.. 12 மாவட்டங்களில் 100 டிகிரி கடந்த வெப்பம். அடுத்து என்ன?

Tamil Nadu Weather Update: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் வெப்ப சலனம் காரணமாக மழை பதிவாகக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும் பகல் நேரங்களில் வெப்பநிலை என்பது 39 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து பதிவாகும் வெப்பநிலை.. அசௌகரியம் ஏற்படும் என எச்சரிக்கை..

Tamil Nadu Weather Update: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை என்பது இரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்த காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஒரு சில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொளுத்தும் வெயில்.. 9 மாவட்டங்களில் சதமடித்த வெயில்.. இனி இப்படி தான் இருக்கும்..

Tamil Nadu Weather Update: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னை பொறுத்தவரை அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 38.8 டிகிரி செல்சியஸும், நுங்கம்பாக்கத்தில் 37.8 டிகிரி செல்சியஸும் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

கோவை நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை.. சென்னையில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவாகும் வெப்பநிலை..

Tamil Nadu Weather Update: சென்னையில், அதிகபட்ச வெப்பநிலையானது 38 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெப்ப நிலை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கமும் அதிகரித்துள்ளது.

சென்னையில் தொடரும் மழை.. பிற மாவட்டங்களில் எப்படி? வானிலை ரிப்போர்ட் இதோ..

Tamil Nadu Weather Update: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொற்த்தவரையில் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும், மாலை நேரங்களில் வெப்ப சலனம் காரணமாக நகரின் அனேக பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி டூ கோவை.. அடுத்த 2 நாட்களுக்கு வெளுக்கும் கனமழை.. லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!

Tamil Nadu Weather Alert : தமிழகத்தில் நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களுக்கு 2025 ஜூன் 4,5ஆம் தேதிகளில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதோடு, சென்னையில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

Tamil Nadu Rain Forecast: தமிழ்நாட்டில் 2025 ஜூலை 4 முதல் 9 வரை லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் 2025 ஜூலை 4, 5 ஆகிய தேதிகளில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் 50-70 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

சில்லென மாறிய சென்னை.. அடுத்த 10 நாட்களுக்கு மழை தொடரும் – பிரதீப் ஜான் தகவல்..

Tamil Nadu Weather Update: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு வெப்ப சலனம் காரணமாக மழை இருக்கும் எனவும் இதனால் உஷ்ணம் தனியும் எனவும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

Tamilnadu Weather Update: தமிழகத்தில் ஜூலை 15-ந் தேதி வரை வெப்பம் அதிகரிக்கும்

Tamil Nadu Weather Forecast July 2025: 2025 ஜூன் மாதத்தில் தமிழ்நாட்டில் 14% அதிக மழை பதிவாகியுள்ளது. 2025 ஜூலையில் வெப்பநிலை 1-2 டிகிரி உயரும் எனவும், மழை குறைவாக இருக்கும் எனவும் இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. ஜூலை இரண்டாவது வாரத்தில் தென்மேற்கு வங்கக் கடலில் காற்று சுழற்சி உருவாகி, கடலோரப் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சுட்டெரிக்கும் சூரியன்.. அதிகரிக்கும் வெயிலின் தாக்கம்.. வானிலை சொல்வது என்ன?

Tamil Nadu Weather Update: தமிழகத்தில் மழையில் தீவிரம் குறைந்து வந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரையில் 40.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதேபோல் வேலூரில் 39.3 டிகிரி செல்சியஸும், திருத்தணியில் 38.5 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது.

8 மாவட்டங்களில் சதமடித்த வெயில்.. அதிகரிக்கும் வெப்பநிலையால் அசௌகரியம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை..

Tamil Nadu Weather Update: தமிழ்நாட்டில் அடுத்து வரும் 7 நாட்களுக்கு அதாவது ஜுன் 29, 2025 முதல் ஜூலை 5, 2025 வரை ஒரு சில இடங்களில் வெப்பநிலையின் தாக்கம் அதிகரிக்கும் என்றும், ஒரிரு இடங்களில் இயல்பை விட வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.