AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
இலவச கார் - திமுக சட்டமன்ற உறுப்பினர் மீது பரபரப்பு புகார்

இலவச கார் – திமுக சட்டமன்ற உறுப்பினர் மீது பரபரப்பு புகார்

Karthikeyan S
Karthikeyan S | Published: 19 Mar 2026 22:23 PM IST

திருச்சி மாவட்ட மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த அதிமுக ஐடி விங் மாவட்ட செயலாளர் நாகராஜன், அந்த கொகுதியை சேர்ந்த திராவிட முன்னேற்ற கழக சட்டமன்ற உறுப்பினர் குறித்து தேர்தல் அலுவலகரிடம் புகார் அளித்துள்ளார். அது குறித்து அவர் செய்தியாளர்களையும் சந்தித்து விளக்கமளித்தார்.

திருச்சி மாவட்ட மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த அதிமுக ஐடி விங் மாவட்ட செயலாளர் நாகராஜன், அந்த கொகுதியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் குறித்து தேர்தல் அலுவலகரிடம் புகார் அளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினர் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில் மணிச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய நகர செயலாளர், நகர கழக செயலாளர் உள்ளிட்டோருக்கு 7 சொகுசு கார்களை வழங்கியுள்ளார். அதனை தனது முகநூல் பக்கத்திலும் வெளிப்படையாக வெளியிட்டுள்ளார். தேர்தலின் விதிகளின் படி ஒரு வேட்பாளர் அதிக பட்சமாக ரூ.40 லட்சம் தான் செலவு செய்ய வேண்டும். ஆனால் அவர் வழங்கிய ஒரு கார் ரூ.15 லட்சம் இருக்கும் என்றார்.

Follow Us