AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
சமையல் எரிவாயு

சமையல் எரிவாயு

சமையல் எரிவாயு (LPG) இன்றைய நவீன வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டது. எல்பிஜி என்பது புரொப்பேன் மற்றும் பியூட்டேன் வாயுக்களின் கலவையாகும். தூய்மையான மற்றும் திறமையான எரிபொருளான வீட்டு உபயோகத்திற்கான சமையல் கேஸ் சிலிண்டர் 14.2 kg எடையில், கோடிக்கணக்கான இல்லங்களில் அன்றாடச் சமையலுக்குப் பெரிதும் உதவுகிறது. இது சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத ஆற்றல் மூலமாகும். இது மிகக் குறைந்த அழுத்தத்தில் திரவமாக்கப்பட்டு சிலிண்டர்களில் அடைக்கப்படுகிறது. ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் உணவு தயாரிப்புகளுக்குப் பெரிய அளவிலான வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர்கள் 19 Kg எடையில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த எல்பிஜி கேஸ் சிலிண்டர்களின் விலை சந்தை நிலவரத்திற்கு ஏற்ப மாறக்கூடியது. இதன் விலையைத் தீர்மானிப்பதில் சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு முக்கியப் பங்கு வகிக்கின்றன.

Read More

இனி சிலிண்டர் புக்கிங்கிற்கு 45 நாட்கள் வேண்டாம்.. சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு இடைவெளி 25 நாட்களாக குறைப்பு!

மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட மோதல் காரணமாக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் சிலிண்டர் முன்பதிவுக்கு வெவ்வேறு கால இடைவெளிகள் தற்காலிகமாக நிர்ணயிக்கப்பட்டன. அதன்படி, நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் 25 நாட்களுக்குப் பிறகும், கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் 45 நாட்களுக்குப் பிறகும் அடுத்த சிலிண்டரை முன்பதிவு செய்யும் நடைமுறை கொண்டுவரப்பட்டது.

“புக் செய்த 4 மணி நேரத்தில் சிலிண்டர் டெலிவரி!”.. சென்னை மக்களுக்கு குட் நியூஸ்!!

Indane XtraLite Cylinder: சமையல் எரிவாயு சிலிண்டர் புக் செய்த வெறும் 4 மணி நேரத்திற்குள் வீடு தேடி டெலிவரி செய்யும் புதிய சேவையை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 'இன்டேன் எக்ஸ்ட்ரா லைட்' (Indane XtraLite) என்ற 10 கிலோ எடைகொண்ட இந்த ஃபைபர் சிலிண்டரில் எரிவாயு அளவை வெளியிலிருந்தே பார்க்கும் வசதியும் உள்ளது. சென்னை உள்பட முக்கிய நகரங்களில் இச்சேவை கிடைக்கிறது.

KYC-ஐ முடிக்காவிட்டால் கேஸ் சிலிண்டர் கிடைக்காது – எப்படி செய்வது?

எல்பிஜி வாடிக்கையாளர்கள் ஆகஸ்ட் 16, 2026 அன்றுக்குள் தங்கள் e-KYC பணிகளை முடிக்க வேண்டும். ஒவ்வொரு வாடிக்கையாளரும் KYC செயல்முறையை முடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயல்முறை மிகவும் எளிமையானது. இதை ஆன்லைனில் எப்படி முடிப்பது என்பதைத் தெரிந்துகொள்ளலாம். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மானியம் வழங்குவதில் சிக்கல்? எல்பிஜி சிலிண்டர் விலை உயருமா?

நடப்பு நிதியாண்டில் மொத்த எல்பிஜி மானியத்துக்கு ஆகும் செலவு ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதனை சமாளிக்க மத்திய அரசுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடுகள் தேவைப்படலாம். அதனை சமாளிக்க எல்பிஜி சிலிண்டர் விலை உயர்த்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

எரிபொருள் மீதான தற்காலிக கட்டுப்பாடுகள் நீக்கம்.. மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் முடிவு – மத்திய அமைச்சர் அறிவிப்பு

இதுகுறித்து மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகளாவிய எரிசக்தி நெருக்கடியின் உச்சக்கட்ட காலத்தில் பொதுமக்களுக்கு பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி சிலிண்டர்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் மத்திய அரசு தற்காலிக கட்டுப்பாடுகளை அமல்படுத்தியதாக தெரிவித்தார்.

LPG சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு.. புதிய விதிகளை வெளியிட்ட மத்திய அரசு!

LPG Cylinder Rules: PNG வசதி உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள், தங்களது தற்போதைய எல்பிஜி இணைப்பு நிலையை சரிபார்த்து கொள்ள வேண்டும். புதிய விதிமுறைகள் குறித்து அருகிலுள்ள கேஸ் ஏஜென்சி அல்லது சேவை வழங்குநரிடம் ஆலோசனை பெறுவது நல்லது என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

வீட்டு உபயோக சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு.. 3 மாதங்களில் 2வது முறையாக அதிகரிப்பு.. விலை விவரம்!

Domestic LPG cylinder price hiked: கடந்த மூன்று மாதங்களில் சமையல் எரிவாயு விலை உயர்த்தப்படுவது இது இரண்டாவது முறையாகும். கடந்த மார்ச் மாதம் 14 கிலோ எடைகொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.60 உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் விலை அதிகரித்துள்ளது.

இன்று முதல் அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்.. பான் கார்டு தளர்வு முதல் பயோமெட்ரிக் வருகைப் பதிவு வரை.. முழு விவரம்!!

வங்கிகளில் ரொக்கப் பரிவர்த்தனைகளுக்கான பான் கார்டு விதிகளில் முக்கிய தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக வங்கிக் கணக்குகளில் ஒரே நாளில் 50,000 ரூபாய்க்கு மேல் ரொக்கமாகப் பணம் டெபாசிட் செய்வதற்குப் பான் கார்டு கட்டாயமாக இருந்தது. ஆனால், இன்று முதல் இந்த டெபாசிட் நடைமுறைக்கு பான் கார்டு கட்டாயம் இல்லை.

போர் பதற்றம் எதிரொலி… வணிக சிலிண்டர்களின் விலை மீண்டும் உயர்வு!

Commercial Cylinder Price Increased: மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டு வரும் போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இதன் எதிரொலியாக இந்தியாவில் வணிக சிலிண்டர்களின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிலிண்டர் விலை உயர்வு.. மே 7- இல் இடதுசாரிகள் தமிழகம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்!

Left Parties Announce Protest : தமிழகத்தில் சிலிண்டர் விலை உயர்வு, ரயில்வே பணியிட குறைப்பு காரணமாக மத்திய அரசை கண்டித்து வருகிற மே 7- ஆம் தேதி இடது சாரி கட்சிகள் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

எரிபொருள் விலை உயர்வு.. மத்திய அரசின் நீண்ட கால திட்டம் வேண்டும்.. பெ.சண்முகம் வலியுறுத்தல்!

Marxist Secretary Shanmugam : இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக நீண்ட கால திட்டத்தை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்தார் .

சென்னையில் PG விடுதி கட்டணங்கள் உயர்வு.. அதிர்ச்சியில் பேச்சுலர்ஸ்..

இந்த சிக்கலான சூழ்நிலையில் மர அடுப்புகளை பயன்படுத்தி உணவு தயாரித்து வழங்கி வருவதாகவும், மரக்கட்டைகள் மற்றும் மளிகைப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மே 5ஆம் தேதி முதல் புதிய கட்டணங்கள் அமலுக்கு வரும் வகையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலிண்டர் விலை உயர்வு.. மக்களின் துயரை எண்ணி தீர்வை காண வேண்டும் – முதல்வர் ஸ்டாலின்

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலையும் உயரக்கூடும் என அச்சம் நிலவுகிறது. சில உணவகங்களில் ஏற்கனவே தங்களது மெனுவில் சில உணவுகள் கிடைக்காது என அறிவிப்புகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், சென்னையில் சில உணவகங்களில் பிரியாணிக்கு ₹10 வரை மற்றும் பரோட்டா ஒன்றுக்கு ₹5 வரை விலை உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணிக சிலிண்டர் விலை உயர்வு – சாலையோர உணவகங்களுக்கு கடும் பாதிப்பு?

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக மே 1, 2026 அன்று 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் ரூ.933 விலை உயர்வை சந்தித்துள்ளது. இதனால் சாலையோர உணவகங்கள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

சிலிண்டர் தட்டுப்பாடு இருக்காது.. எல்.பி.ஜி டேங்கர் லாரி வேலை நிறுத்தப்போராட்டம் வாபஸ்..

இன்று காலை முதல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் லோடு ஏற்றாமல் பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டன. குறிப்பாக நாமக்கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் லாரிகள் இயக்கம் பாதிக்கப்பட்டது. நாமக்கல்லை தலைமையிடமாக கொண்ட தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் இந்த வேலைநிறுத்தத்தை ஒருங்கிணைத்தது.