AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திமுகவை பழிவாங்குவதே தவெகவின் ஒரே பணியாக உள்ளது.. உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு!

Udhayanidhi criticized TVK government: திமுகவை பழிவாங்குவதே தமிழக வெற்றிக் கழகத்தின் ஒரே வேலையாக இருப்பதாக முன்னாள் முதல் அமைச்சரும், எதிர்க் கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக அவர் கூறியதை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.

திமுகவை பழிவாங்குவதே தவெகவின் ஒரே பணியாக உள்ளது.. உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு!
உதயநிதி விஜய்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 27 Jul 2026 20:54 PM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் விராலிமலை தொகுதி எம்எல்ஏ மார்க்கண்டேயன் பங்கேற்று பேசியிருந்தார். அப்போது, முதல் அமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக தெரிகிறது. இது தொடர்பாக, தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில் மார்க்கண்டேயன் எம். எல். ஏ. வை போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்திருந்தனர். அவரை முன்னாள் துணை முதல்வரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்து இருந்தார். இதை தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக அரசை தவறாக பேசியதாக வழக்கு பதிவு செய்து மிரட்டும் வகையில் திராவிட முன்னேற்ற கழக எம்எல்ஏ மார்க்கண்டயனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர், சிறையில் தைரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்து வருகிறார்.

திமுகவை பழி வாங்குவதே தவெக அரசின் ஒரே பணி

திராவிட முன்னேற்ற கழகத்தை பழிவாங்குவது தான் தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசின் ஒரே பணியாக இருக்கிறது. திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி பகுதிகளில் தமிழக வெற்றி கழக கட்சியை சேர்ந்தவர்களே பல்வேறு புகார்களை தெரிவிக்கின்றனர். அந்த புகாரின் மீது தற்போது வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுத்த மாதிரி தெரியவில்லை. திராவிட முன்னேற்ற கழக எம்எல்ஏக்கள் மற்றும் அனைத்திந்திய திராவிட முன்னேற்றக் கழக எம்எல்ஏக்களை ஷோபா கொடுத்து வாங்கும் பணிகளை தான் தமிழக வெற்றிக் கழகம் 24 மணி நேரமும் செய்து வருகிறது என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: ரூ.5 ஆயிரம் லஞ்சம்.. லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கிய சிறப்பு எஸ்ஐ.. திருப்பத்தூரில் சம்பவம்!

திமுக கூட்டணி கட்சிகளுக்கு சோபா செட்டுகள்

தமிழக வெற்றிக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்களை தங்களது கூட்டணியில் இணைத்தது. இதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி, சி.வி சண்முகம் தலைமையிலான குழுவினர், இந்திய முஸ்லிம் லீக் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் சோபாக்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனை மையமாக வைத்து திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர்கள் சோபா செட்டுகள் வழங்கி அரசியல் செய்து வருவதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

முதல்வரை மிரட்டல் விடுத்ததாக எம்எல்ஏ கைது

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யை எலும்பை முறிப்பேன் என்று விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசி இருந்தார். இது தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர், பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள வரை உதயநிதி ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: 717 டாஸ்மாக் கடைகள் உண்மையிலேயே மூடப்பட்டதா? RTI ஆதாரத்தை கேக்கும் நயினார் நாகேந்திரன்!

Follow Us