கோவிலில் செல்போன் விவகாரம் தோல்வியா? அமைச்சர் ரமேஷ் விளக்கம்
Minister Ramesh Defends Temple Policy : மதுரையில் தந்தை பெரியாரின் பிறந்த தினத்தையொட்டி அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது பேசிய அவர், கோவிலில் செல்போன் விவகாரத்தில் தோல்வி என எதுவும் இல்லை. மக்களுக்கு தேவையானதை செய்து வருகிறோம் என்றார்.
மதுரை, செப்டம்பர் 17 : மதுரையில் தந்தை பெரியாரின் பிறந்த தினத்தையொட்டி அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரமேஷ், திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வரட்டும். தீர்ப்பு வந்த பின்பு பார்த்துக் கொள்ளலாம் என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், கார்த்திகை தீபம் தொடர்பாக எந்தப் பிரச்னையும் இல்லை. அது ஒரு கொண்டாட்டம். அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள். எப்போதும் போல மக்களோடு சேர்ந்து மகிழ்ச்சியாக கொண்டாடுவோம் என அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.
இதையும் படிக்க : நவோதயா பள்ளிகளுக்கு முட்டுக்கட்டை?.. “3 மாசம் தான் டைம்!”.. தமிழக அரசுக்கு கெடு விதித்த உச்சநீதிமன்றம்!!




கோவில் யானைகள் தொடர்பாக பேசிய அவர், யானைகளை நன்கொடையாளர்கள் விரும்பி கோவில்களுக்கு வழங்குகின்றனர். நீதிமன்ற அனுமதியுடனேயே யானைகள் கோவில்களுக்கு வழங்கப்படுகின்றன. யானைகள் மிகச்சிறப்பாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பாகன்களால் முறையாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. யானைகளுக்கு தேவையான மருத்துவ உதவிகள் மற்றும் உணவு முறையாக வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
கோவிலில் செல்போன் விவகாரம் தோல்வியா?
அறநிலையத்துறை கோவில்களில் போலி கல்விச் சான்றிதழ்களை கொடுத்து யாரேனும் பணியில் சேர்ந்திருந்தால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற முறைகேடுகள் இருந்தால் கட்டாயம் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார். கோவிலில் செல்போன் விவகாரத்தில் தோல்வி என எதுவும் இல்லை. மக்களுக்கு தேவையானதை செய்து வருகிறோம். கோவிலில் அரசியல் செய்யும் கூட்டம் உள்ளது. நல்லதோ, கெட்டதோ அதை வைத்து அரசியல் செய்கிறார்கள் என அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.
தமிழக முதல்வரின் ஆட்சியில் மக்கள் எந்தக் குறையும் இல்லாமல் சீரும் சிறப்புமாக உள்ளனர். இடைத்தேர்தலில் நாங்கள் உழைக்க உள்ளோம் எனவும் அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார். நாங்கள் ஜெயிப்போமா, டெபாசிட் வாங்குவோமா என்றெல்லாம் பேசினார்கள். ஆனால் தற்போது வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தில் உள்ளோம். எனவே பாசிட்டிவ்வாக யோசியுங்கள் என அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.
இதையும் படிக்க : நவோதயா பள்ளிகளுக்கு முட்டுக்கட்டை?.. “3 மாசம் தான் டைம்!”.. தமிழக அரசுக்கு கெடு விதித்த உச்சநீதிமன்றம்!!
எங்கள் கொள்கை விளக்க மாநாடு நடைபெற்றபோதே பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையை ஏற்கவில்லை என தைரியமாக சொன்னவர் எங்கள் தலைவர். அவருக்கு எல்லா மதமும், எல்லா மக்களும் ஒன்றுதான். நாடு முழுவதும் உள்ள நம்பிக்கை கொண்ட மக்களின் நம்பிக்கையை ஏற்று தமிழக முதல்வர் பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்தார். எங்கள் தலைவருக்கு “எம்மதமும் நம் மதம்” என்பதுதான் கோட்பாடு என அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.