மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் ‘வரவு’. இந்தப் படம் வரும் செப்டம்பர் 11ஆம் தேதி முதல் ZEE5 தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. இந்தப் படத்தை மலையாள சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஷாஜி கைலாஸ் இயக்கியுள்ளார். நீசி ரெஜி தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.கே. சாஜன் திரைக்கதை எழுதியுள்ளார். படத்தில், போலி என்ற கதாபாத்திரத்தில் ஜோஜு ஜார்ஜ் நடித்துள்ளார். சிறை தண்டனையை முடித்துவிட்டு தனது சொந்த ஊருக்கு திரும்பும் போலிக்கு, பல ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தனது தம்பி வில்லியை தேடும் சூழல் ஏற்படுகிறது.