உலகின் மிகப்பெரிய பாலைவன நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில், 95 சதவீதத்திற்கும் மேற்பட்ட நிலப்பரப்பு வறண்ட பாலைவனமாக உள்ளது. ஆண்டுக்கு பல பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் குறைவாகவே மழை பெய்கிறது. கோடை காலத்தில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸையும் தாண்டுகிறது. ஆனால், இத்தகைய கடுமையான சூழலிலும் சுமார் 3.7 கோடி மக்களுக்கு தொடர்ந்து குடிநீர் கிடைத்து வருகிறது. இதற்காக சவுதி அரேபியா உருவாக்கியிருப்பது ஒரு மிகப்பெரிய செயற்கையான நீர் விநியோக கட்டமைப்பு. கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களில், கடல்நீர் எடுக்கப்படுகிறது. பின்னர் பல கட்ட சுத்திகரிப்பு முறைகள் மூலம், அந்த நீர் குடிநீராக மாற்றப்படுகிறது.