மும்பை தஹிசார் மேற்கு பகுதியில், குடியிருப்பு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் சுமார் 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பதுங்கியிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கந்தர்பாடா பகுதியில் உள்ள மகேஷ்வர் பில்டிங் குடியிருப்பு வளாகத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சனிக்கிழமை அன்று, குடியிருப்பாளர் சன்னி காம்ப்ளேவின் சகோதரி பயன்படுத்தும் காரில் இருந்து பெரிய பாம்பு ஒன்று மெதுவாக வெளியே வந்து, காரின் ஹூட் பகுதிக்கு நகர்வதை அங்கிருந்தவர்கள் கவனித்துள்ளனர். அருகில் சென்று பார்த்தபோதுதான், அது சாதாரண பாம்பு இல்லை என்பதும், மிகப்பெரிய மலைப்பாம்பு என்பதும் தெரியவந்தது.