AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Tamil Nadu Weather Alert: 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை

Tamil Nadu weather today : தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், திண்டுக்கல், நீலகிரி, தேனி, மதுரை, விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் செப்டம்பர் 17, 2026 இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

Tamil Nadu Weather Alert:  6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 17 Sep 2026 14:56 PM IST

சென்னை, செப்டம்பர் 17 : தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், திண்டுக்கல், நீலகிரி, தேனி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் செப்டம்பர் 17, 2026 இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும் செப்டம்பர் 18, 2026 நாளை நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மராத்வாடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து மன்னார் வளைகுடா வரை, உள் கர்நாடகா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

இதையும் படிக்க : பெரியார் பிறந்தநாளில் புகழாரம் சூட்டிய அண்ணாமலை.. திராவிட அரசியலை நோக்கிப் பயணமா? அரசியல் களத்தில் பெரும் திருப்பம்!!

இதன் காரணமாக செப்டம்பர் 17, 2026 இன்று நீலகிரி, கோயம்புத்தூர் திண்டுக்கல், தேனி, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். அதனைத் தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பிற பகுதிகளில் ஒருசில இடங்களிலும் புதுவையிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 18, 2026 நாளை நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : ரூ. 15,000 கோடி முதலீடுகள், 7000 பேருக்கு வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் ஒரு புதிய மைல்கல்..

இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சேலம், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல், மதுரை, சிவகங்கை, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், கரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் ) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us