7 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை.. பிற மாவட்டங்களில் எப்படி?
Weather Report: சென்னையைப் பொறுத்தவரையில், அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 31 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், நுங்கம்பாக்கத்தில் 36.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம் எனவும், மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 16, 2026: தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அந்த வகையில், செப்டம்பர் 17ஆம் தேதியான இன்று நீலகிரி, கோவை, கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொடரும் கனமழை:
இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சேலம், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, மதுரை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 18
செப்டம்பர் 18ஆம் தேதி நீலகிரி மற்றும் கோவை ஆகிய இரண்டு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும், இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 19
செப்டம்பர் 19ஆம் தேதி நீலகிரி, கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: வந்தது குட் நியூஸ்!.. ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம்.. தேதியை அறிவித்தது தமிழக அரசு!!
இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் ஏனைய வட தமிழக மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 20
செப்டம்பர் 20ஆம் தேதி நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய தமிழக மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது
அதிகபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரையில், அடுத்த சில நாட்களில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது எனவும், இயல்பை ஒட்டியே வெப்பநிலை பதிவாகக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் திருச்சியில் அதிகபட்சமாக 38.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து திருத்தணியில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும், வேலூரில் 37.3 டிகிரி செல்சியஸ், நாமக்கல்லில் 37 டிகிரி செல்சியஸ், ஈரோட்டில் 36.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
மேலும் படிக்க: மீனாட்சி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா.. ஒரு லட்சம் பக்தர்களுக்கு அன்னாதானம்..
சென்னையில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னையைப் பொறுத்தவரையில், அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 31 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், நுங்கம்பாக்கத்தில் 36.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம் எனவும், மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.