AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்த ‘பார்வதி’ யானை!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்த ‘பார்வதி’ யானை!

Vinalin Sweety
Vinalin Sweety | Published: 14 Sep 2026 23:25 PM IST

மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்கனவே ‘பார்வதி’ என்ற பெண் யானை ஒன்று உள்ள நிலையில் தற்போது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அசாம் மாநிலத்தில் இருந்து துர்கா என்கிற 5 வயது பெண் யானை ஒன்று வாங்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒட்டகமும் வாங்கப்பட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கொண்டுவரப்பட்டது.

மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்கனவே ‘பார்வதி’ என்ற பெண் யானை ஒன்று உள்ள நிலையில் தற்போது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அசாம் மாநிலத்தில் இருந்து துர்கா என்கிற 5 வயது பெண் யானை ஒன்று வாங்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒட்டகமும் வாங்கப்பட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கொண்டுவரப்பட்டது. கோயில்களுக்குப் புதிதாக யானைகள் வாங்கவோ, தானமாகப் பெறவோ கூடாது என்று தனி நீதிபதி விதித்திருந்த தடையை, சென்னை உயர் நீதிமன்ற அமர்வு அண்மையில் ரத்து செய்து உத்தரவிட்டு இருந்த நிலையில் அசாம் மாநிலத்தில் இருந்து ‘துர்கா’ என்ற பெண் யானை மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குக் கொண்டு வர வனத்துறை ஒப்புதல் அளித்திருந்தது. அசாமில் உள்ள மானஸ் தேசிய பூங்காவில் இருந்து சுமார் 3,000 கிலோமீட்டர் பயணம் செய்து இந்த 5 வயது பெண் யானை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவில் வளாகத்திற்கு வந்தடைந்த இந்த யானைக்கு பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.

Follow Us