சாடிவயல் யானைகள் முகாமில் விநாயகர் சதுர்த்தி விழா.. யானைகளுக்கு சிறப்பு பூஜை..
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கோவை வனக்கோட்டம் போளுவாம்பட்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. முகாமில் உள்ள ‘சுயம்பு’, ‘பாரி’ உள்ளிட்ட கும்கி யானைகளை வனத்துறையினர் மற்றும் பாகன்கள் அதிகாலையில் நொய்யல் ஆற்றில் குளிப்பாட்டி, நெற்றியில் திருநீறு, சந்தனம், குங்குமம் வைத்து மாலைகள் அணிவித்து அலங்கரித்தனர். தொடர்ந்து விநாயகர் படத்துக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு, கும்கி யானைகளுக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க ‘கஜ பூஜை’ நடைபெற்றது.

பூஜை நிறைவடைந்ததும் யானைகளுக்கு கரும்பு, வாழைப்பழம், ஆப்பிள், அன்னாசி, தேங்காய் உள்ளிட்ட பழங்களும், அரிசி, வெல்லம் மற்றும் சத்து மாவு உருண்டைகள் உள்ளிட்ட உணவுகளும் வழங்கப்பட்டன. இதில் வனத்துறை அதிகாரிகள், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள் மற்றும் யானைப் பாகன்கள் கலந்து கொண்டனர்.