AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
ஆம்னி பேருந்தில் மின்கசிவு: 3 மணி நேரம் தவித்த பயணிகள்..

ஆம்னி பேருந்தில் மின்கசிவு: 3 மணி நேரம் தவித்த பயணிகள்..

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 11 Sep 2026 07:31 AM IST

கோவை சிங்காநல்லூர் பகுதியில் தனியார் ஆம்னி பேருந்தில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு புகை வெளியேறியதால், பயணிகள் அலறியடித்து பேருந்தை விட்டு வெளியேறினர். இதையடுத்து, சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக மாற்றுப் பேருந்து ஏற்பாடு செய்யப்படாததால் பயணிகள் சாலையிலேயே காத்திருந்தனர். பயணிகளில் இதயப் பிரச்சனை கொண்ட குழந்தையுடன் வந்த குடும்பத்தினரும், உடல்நலக் குறைபாடு உள்ளவர்களும் இருந்ததாக கூறப்படுகிறது.

கோவை சிங்காநல்லூர் பகுதியில் தனியார் ஆம்னி பேருந்தில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு புகை வெளியேறியதால், பயணிகள் அலறியடித்து பேருந்தை விட்டு வெளியேறினர். இதையடுத்து, சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக மாற்றுப் பேருந்து ஏற்பாடு செய்யப்படாததால் பயணிகள் சாலையிலேயே காத்திருந்தனர். பயணிகளில் இதயப் பிரச்சனை கொண்ட குழந்தையுடன் வந்த குடும்பத்தினரும், உடல்நலக் குறைபாடு உள்ளவர்களும் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், மாற்று ஏற்பாடு செய்யாத பேருந்து நிர்வாகத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த தமிழக வெற்றிக் கழக (TVK) நிர்வாகிகள், பயணிகளுக்கு ஆதரவாக அவர்களுடன் இணைந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, மாற்றுப் பேருந்து ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுத்தனர். மின்கசிவு ஏற்பட்ட பேருந்து மற்றும் அலட்சியமாக செயல்பட்ட நிர்வாகம் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.

Follow Us