நடிகர் மம்மூட்டி, தனுஷ் நடித்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் ‘ஓம் Chapter 1: உதிரம், The Blood Wood’ திரைப்படம் மூலம் 7 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவுக்கு திரும்புகிறார். தனது 75வது பிறந்தநாளையொட்டி, படத்தில் அவரது கதாபாத்திரமான ‘பர்மா கார்த்திகேயன்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சியா’ மற்றும் ‘தி எல்டர் ஒன்’ என அழைக்கப்படும் அவரது கதாபாத்திரம், காவல்துறையினரிடமும் பொதுமக்களிடமும் தனி மரியாதை பெற்ற கடத்தல்காரராக சித்தரிக்கப்பட்டுள்ளது. “சிறிது தாமிரம் கலந்த தங்கம்” என தன்னை அவர் வர்ணிப்பது, கதாபாத்திரம் முழுமையான நல்லவராகவோ, வில்லனாகவோ இருக்காது என்பதை உணர்த்துகிறது. மம்மூட்டியின் கடைசி தமிழ் திரைப்படம் ராம் இயக்கிய ‘பேரன்பு’ ஆகும். தற்போது ‘ஓம்’ படத்தில் தனுஷுடன் இணைந்து நடிக்கிறார். சாய் பல்லவி, ஸ்ரீலீலா, நசீருதீன் ஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தனுஷின் வுண்டர்பார் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படம் அக்டோபர் 16ஆம் தேதி வெளியாகிறது.