பேருந்தில் ஆபத்தான பயணம்: கால் இடறிய மாணவன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய காட்சி!
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் இருந்து பட்டவர்த்தி, மணல்மேடு உள்ளிட்ட கிராமப்புறங்களுக்கு தினமும் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்குச் சென்று வருகின்றனர். போதிய பேருந்துகள் இயக்கப்படாததால், மாணவர்கள் அரசு பேருந்துகளில் படிகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், மணல்மேடு நோக்கிச் சென்ற அரசு பேருந்தில் பள்ளி சீருடை அணிந்த மாணவன் ஒருவர், படியில் இடமின்றி ஒற்றைக் காலில் தொங்கியபடி பயணம் செய்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் இருந்து பட்டவர்த்தி, மணல்மேடு உள்ளிட்ட கிராமப்புறங்களுக்கு தினமும் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்குச் சென்று வருகின்றனர். போதிய பேருந்துகள் இயக்கப்படாததால், மாணவர்கள் அரசு பேருந்துகளில் படிகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மணல்மேடு நோக்கிச் சென்ற அரசு பேருந்தில் பள்ளி சீருடை அணிந்த மாணவன் ஒருவர், படியில் இடமின்றி ஒற்றைக் காலில் தொங்கியபடி பயணம் செய்துள்ளார். அரசு மருத்துவமனை சாலையில் பேருந்து சென்றபோது, தொடர்ந்து தொங்க முடியாமல் அவரது கால் இடறி கீழே விழும் நிலை ஏற்பட்டது. அப்போது வேகத்தடை இருந்ததால், நல்வாய்ப்பாக மாணவன் கீழே விழாமல் தடுமாறியபடி மீண்டும் பேருந்துடன் ஓடியுள்ளார். இந்தக் காட்சியை சாலையில் சென்றவர்கள் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேருந்தில் ஆபத்தான பயணம்: கால் இடறிய மாணவன் உயிர்தப்பிய காட்சி!
பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் சர்வசாதாரணமாக உலா வரும் பன்றி
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: ஏற்பாடுகள் தீவிரம்..
முதல்வர் விஜய்யின் பேச்சு மிகவும் கீழ்த்தரமானது - எம்.பி கனிமொழி
