மாமதுரை திருவிழா 2.0.. பட்டாசு வெடிப்பதை காண கூடிய பொதுமக்கள்!
மதுரையில் மாமதுரை விழா 2.0 கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் காரணமாக அங்கு வண்ண வண்ண நிறங்களில் வான வேடிக்கைகள் வெடிக்கப்பட்டது. அதனை அந்த பகுதியை சேர்ந்த சுற்று வட்டார பொதுமக்கள் வைகை ஆற்றின் கரையோரம் நின்று கண்டு களித்தனர்.
மதுரையில் மாமதுரை விழா 2.0 கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் காரணமாக அங்கு வண்ண வண்ண நிறங்களில் வான வேடிக்கைகள் வெடிக்கப்பட்டது. அதனை அந்த பகுதியை சேர்ந்த சுற்று வட்டார பொதுமக்கள் வைகை ஆற்றின் கரையோரம் நின்று கண்டுகளித்தனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து தரப்பினரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்த வான வேடிக்கைகளை கண்டுகளித்தனர். முன்னதாக செப்டம்பர் 05, 2026 அன்று தமுக்கம் மைதானத்தில் பிரம்மாண்ட ட்ரோன் ஒளிக்காட்சி நடைபெற்றது. இதில், 50-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலம் மீன் சின்னம், மீனாட்சி கோபுரம் உள்ளிட்ட உருவங்களும் தோன்றின. இதனையும் அந்த சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
