நாட்டில் வெங்காய உற்பத்தி தேவையைவிட அதிகமாக இருந்தாலும், சில சந்தைகளில் சில்லறை விலை கிலோ ரூ.60 வரை உயர்ந்துள்ளது. இதற்கு வெங்காய தட்டுப்பாடு காரணமல்ல; பருவமழையற்ற மழை மற்றும் சேமிப்பின்போது ஏற்பட்ட அழுகலே முக்கிய காரணம் என கூறப்படுகிறது. இந்த ஆண்டு இந்தியாவில் 307.37 லட்சம் டன் வெங்காயம் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பெய்த கனமழையால் வயல்களில் நீர்த்தேக்கம் ஏற்பட்டதுடன், வெங்காயத்தில் அதிக ஈரப்பதம் சேர்ந்தது. ஜூன், ஜூலை மாதங்களில் நிலவிய வெப்பம் மற்றும் ஈரப்பதத்தால் பூஞ்சை தாக்கி, சேமித்து வைக்கப்பட்ட வெங்காயம் அதிகளவில் அழுகியது.