எச்.ஐ.வி. தொற்றைத் தடுக்கும் வகையில் ஆண்டுக்கு இருமுறை செலுத்தப்படும் லெனகாபாவிர் மருந்தின் பொதுவகை (Generic) பதிப்புகள் இந்தியாவில் விரைவில் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் (CDSCO) கீழ் செயல்படும் நிபுணர் குழு, இந்திய நிறுவனங்களான டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ் மற்றும் எம்கியூர் பார்மாசூட்டிக்கல்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கும் லெனகாபாவிருக்கு உள்ளூர் 3-ம் கட்ட மருத்துவப் பரிசோதனையில் இருந்து விலக்கு அளிக்க பரிந்துரைத்துள்ளது.