ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘அல போலேலோ’ வெளியாகியுள்ளது. அனிருத் ரவிச்சந்தர் பாடி, இசையமைத்துள்ள இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, பாடலில் இடம்பெற்றுள்ள மலையாள வரிகள் தவறாக உச்சரிக்கப்பட்டுள்ளதாக சில ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்துள்ளனர். பாடலின் புரோமோ வெளியானபோதே அதிருப்தி தொடங்கிய நிலையில், முழு பாடல் வெளியான பிறகு விமர்சனங்கள் அதிகரித்துள்ளன.