லடாக் எல்லைப் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 18,600 அடி உயரத்தில், மிகக் கடுமையான சூழ்நிலைக்கு இடையே இந்திய ராணுவப் பைலட்டுகள் மேற்கொண்ட ஆபத்தான மற்றும் வீரமிக்க மீட்புப் பணியின் வீடியோ வெளியாகி பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. நன் குன் மலைப்பகுதியில் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர், எதிர்பாராத விதமாகப் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டார். சுவாசிப்பதே சவாலான மிகக் குறைந்த ஆக்சிஜன் அளவு மற்றும் உறைபனி நிலவும் இவ்வளவு அதிக உயரத்தில், ஹெலிகாப்டரை இயக்குவது பைலட்டுகளுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தது.