“சைக்கிளில் சென்றவரை துரத்திய தெருநாய்கள்” – கோவையில் அதிர்ச்சி சி.சி.டி.வி காட்சி!
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வரும் நிலையில், சைக்கிளில் சென்றவரை தெருநாய்கள் கூட்டமாகத் துரத்தும் சி.சி.டி.வி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுந்தராபுரம், மதுக்கரை சாலை அஷ்டலட்சுமி நகர் பகுதியில் நேற்று மாலை சைக்கிளில் சென்ற நபரை, அங்கு கூட்டமாக நின்றிருந்த தெருநாய்கள் ஆக்ரோஷமாகக் குரைத்தபடி துரத்தியுள்ளன.
கோவை: கோவை மாநகராட்சிப் பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வரும் நிலையில், சைக்கிளில் சென்றவரை தெருநாய்கள் கூட்டமாகத் துரத்தும் சி.சி.டி.வி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுந்தராபுரம், மதுக்கரை சாலை அஷ்டலட்சுமி நகர் பகுதியில் நேற்று மாலை சைக்கிளில் சென்ற நபரை, அங்கு கூட்டமாக நின்றிருந்த தெருநாய்கள் ஆக்ரோஷமாகக் குரைத்தபடி துரத்தியுள்ளன. நாய்களிடம் சிக்காமல் அவர் வேகமாக சைக்கிளை மிதித்துச் சென்ற காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன.
இதே பகுதியில் 8 வயது சிறுமியையும் தெருநாய்கள் துரத்தியதாகக் கூறப்படுகிறது. அச்சமடைந்த சிறுமி இருசக்கர வாகனத்தில் வேகமாகத் தப்பிச் சென்ற நிலையில், அதிர்ஷ்டவசமாக விபத்து தவிர்க்கப்பட்டது. தெருநாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தக் கோரி சமூக ஆர்வலர் நூர் அகமது மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
