
OTT Platform
சினிமா என்றாலே தியேட்டர்கள் என்பது தொன்றுதொட்டு இருந்து வருகிறது. மேடை நாடகங்கள் பின்பு தியேட்டர்களாக மாறின. அதன்பின்னர் டிவி வீடுகளுக்குள் வந்து, புது திரைப்படங்கள் பல மாதங்களுக்கு பிறகு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகின. பின்னர் டிஜிட்டல் உலகம் வளர்ச்சி அடைய, டிவி, கேசட், சிடி, பென் ட்ரைவ் என திரைப்படத்தை பார்க்கும் வசதி மிக எளிதாகின. அதே நேரத்தில் புது படங்கள் இண்டர்நெட்டில் வருவதும், எளிதாக சிடியாக வரும் பெரும் அச்சுறுத்தலாகவே இருந்து வந்தது. இப்படியான பயணம் கொரோனாவுக்கு பிறகு கொஞ்சம் மாறியது. ஓடிடி என்பது மக்களிடையே பிரபலமானது. புதுப்படங்கள், பழைய படங்கள், வெப் சீரிஸ்கள் என போட்டிபோட்டுக்கொண்டு ஓடிடி நிறுவனங்கள் தங்களது பார்வையாளர்களுக்கு படைப்புகளை ரிலீஸ் செய்கின்றனர்.வீட்டில் இருந்தபடியே புதுப்படங்களையும் வெப் சீரிஸ்களையும் பார்க்கலாம் என்பதால் ரசிகர்களும் தங்களுக்கு பிடித்தமான ஓடிடிகளை சப்ஸ்கிரைப் செய்து ரசித்து வருகின்றனர். அப்படி ஓடிடி படங்கள் தொடர்பாகவும் புது ரிலீஸ் தொடர்பாக அப்டேட்களை வழங்குகிறது இந்த பக்கம்
OTT Movies: தொடர் கொலைகள்.. விசாரணையில் ட்விஸ்ட்.. இந்த படம் தெரியுமா?
தொடர் கொலைகளை விசாரிக்கும் போலீஸ் அதிகாரிகள், ஒரு மனநல மருத்துவரின் உதவியை நாடுவது பற்றியது கதையாக காப்பி கேட் அமைந்தது. சிகோர்னி வீவர், ஹோலி ஹண்டர் ஆகியோர் நடித்த இப்படத்தின் திரைக்கதை, ஆரம்பத்தில் வேறு விதமாக இருந்ததையும், பெண் கதாபாத்திரங்களுடன் செம்மைப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Petchi Avudaiappan
- Updated on: Jul 1, 2025
- 10:23 am
OTT Movies: தாயை தேடும் பெண்ணுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. பரபரப்பான த்ரில்லர் படம்!
தாயைத் தேடும் 18 வயது ஜூன் ஆலனின் கதையைச் சொல்கிறது. கொலம்பியாவில் விடுமுறைக்குச் சென்ற தாய் திரும்பவில்லை. விசாரணையின்போது பல அதிர்ச்சித் தகவல்கள் வெளிவர, ஜூன் தனது தாயைக் கண்டுபிடிக்க போராடுகிறாள். இதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதே Missing படத்தின் கதையாகும்.
- Petchi Avudaiappan
- Updated on: Jun 30, 2025
- 09:28 am
மாமன் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Maaman Movie OTT Update: நடிகர் சூரி நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தப் படம் மாமன். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே படத்தின் ஓடிடி உரிமை மற்றும் சாட்டிலைட் உரிமை குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
- Vinothini Aandisamy
- Updated on: Jun 28, 2025
- 17:45 pm
OTT Movies: காமெடி கலந்த பேய் படம்.. ஹாலிவுட் ரசிகர்களே மிஸ் பண்ணாதீங்க!
2025 இல் வெளிவந்த "தி மங்கி" திரைப்படம், ஸ்டீபன் கிங் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டது. கொலின் ஓ'பிரையன், தியோ ஜேம்ஸ் உள்ளிட்டோர் நடித்த இப்படம், ஒரு பழங்காலக் குரங்கு பொம்மையை மையமாகக் கொண்டு, தொடர் மரணங்கள் மற்றும் அமானுஷ்ய சம்பவங்களைச் சித்தரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது.
- Petchi Avudaiappan
- Updated on: Jun 28, 2025
- 09:30 am
OTT Movies: காட்சிக்கு காட்சி பரபரப்பு.. ஓடிடியில் பார்க்க பெஸ்ட் படம்!
Best Movies in OTT: 2003 ஆம் ஆண்டு வெளியான ஐடென்டிட்டி திரில்லர் படம், அகதா கிறிஸ்டியின் நாவலை தழுவி எடுக்கப்பட்டது. ஒரு மோட்டலில் சிக்கிய 10 பேர் ஒவ்வொருவராக கொல்லப்படுவதுதான் கதை. ஜான் குசாக், ரே லியோட்டா உள்ளிட்டோர் நடித்த இப்படம், பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
- Petchi Avudaiappan
- Updated on: Jun 27, 2025
- 09:30 am
OTT Movies: மறக்க முடியாத ஜாக்கிசான் படம்.. தி கராத்தே கிட் எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
The karate kid : 2010 ஆம் ஆண்டு வெளியான "தி கராத்தே கிட்" படம் ஜாக்கி சான் மற்றும் ஜேடன் ஸ்மித்தின் நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. சீனாவின் பெய்ஜிங்கில் குங்ஃபூ பயிற்சி, கலாச்சாரம் மற்றும் குடும்ப உறவுகளை மையமாகக் கொண்ட கதையாக அமைந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு சீனாவின் பிரபல இடங்களில் நடைபெற்றது. விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற இப்படம் ரசிகர்களின் பேவரைட்டாக உள்ளது.
- Petchi Avudaiappan
- Updated on: Jun 26, 2025
- 09:30 am
மலையாள சினிமாவில் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன?
மக்களிடையே ஓடிடி பயன்பாடு அதிகரித்தப் பிறகு தாய் மொழி தவிற மற்ற மொழி படங்களையும் அதிகமாகப் பார்க்கப் பழகிவிட்டனர். இது மற்ற மொழிப் படங்களுக்கு மிகவும் வரவேற்பைப் கொடுக்கும் விதமாக மாறியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மலையாள சினிமாவில் இந்த வாரம் ஓடிடியில் பார்க்க வேண்டிய படங்களில் லிஸ்ட் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
- Vinothini Aandisamy
- Updated on: Jun 25, 2025
- 20:29 pm
OTT Movies: பரபரப்பான திரைக்கதை.. உறைய வைக்கும் உண்மை.. இந்த படம் பாருங்க!
ஆமி ஆடம்ஸ் நடித்த The Woman in the Window திரைப்படம், ஏ.ஜே. ஃபின் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்ட உளவியல் த்ரில்லராகும். அகோராபோபியாவால் பாதிக்கப்பட்ட ஒரு உளவியலாளரின் கதை இதுவாகும். பக்கத்து வீட்டுச் சம்பவங்களை கண்காணிக்கும்போது, ஒரு கொலை சம்பவத்தில் சிக்கி, அதிர்ச்சியூட்டும் உண்மைகளை அவர் கண்டுபிடிக்கிறார்.
- Petchi Avudaiappan
- Updated on: Jun 25, 2025
- 09:30 am
ஓடிடியில் வெளியாகும் சூரியின் மாமன் படம்… எப்போது தெரியுமா?
Maaman Movie OTT Update: நடிகர் சூரியின் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேறபைப் பெற்றப் படம் மாமன். இந்தப் படம் முன்னதாகவே ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் எப்போது படம் வெளியாகும் என்பது குறித்த அப்டேட் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
- Vinothini Aandisamy
- Updated on: Jun 24, 2025
- 10:43 am
OTT Movies: படம் முழுக்க ட்விஸ்ட் .. ஓடிடி ரசிகர்களுக்கு ஏற்ற ஆக்ஷன் படம்!
டேவிட் ஃபின்ச்சர் இயக்கிய "தி கில்லர்" திரைப்படம், அலெக்சிஸ் நோலண்டின் பிரெஞ்சு கிராஃபிக் நாவலை அடிப்படையாகக் கொண்டது. மைக்கேல் ஃபாஸ்பெண்டர் நடிக்கும் இந்தத் திரில்லர், கொலைகாரனின் தந்திரமான செயல்களையும், எதிர்பாராத திருப்பங்களும் கொண்டதாக அமைந்தது. சிறப்பான ஒளிப்பதிவு மற்றும் இசையமைப்புடன் கூடிய இப்படம், விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
- Petchi Avudaiappan
- Updated on: Jun 24, 2025
- 09:53 am
OTT Movies: நடுவானில் திக் திக் நிமிடங்கள்.. ஓடிடியில் பார்க்க சிறப்பான படம்!
ஜெரார்ட் பட்லர் நடித்த "பிளேன்" திரைப்படம், ஒரு விமானம் பிலிப்பைன்ஸில் அவசர தரையிறக்கம் செய்யும் சம்பவத்தையும், அங்கிருக்கும் கிளர்ச்சியாளர்களுடனான மோதல் பற்றியும் விவரிக்கும் கதையாக அமைக்கப்பட்டுள்ளது. விமானி மற்றும் ஒரு குற்றவாளி, உயிர் பிழைப்பதற்காக போராடும் பயணிகள் என நொடிக்கு நொடி பதற்றத்தை உண்டாக்கும் படமாக அமைந்துள்ளது.
- Petchi Avudaiappan
- Updated on: Jun 23, 2025
- 09:30 am
ஓடிடியில் மாஸ் காட்டும் லெவன் படத்தின் விமர்சனம் இதோ!
Eleven Movie: தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஒரே நேரத்தில் உருவாகி கடந்த மே மாதம் திரையரங்குகளில் வெளியான படம் லெவன். இந்தப் படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கின்றது. திரையரங்கை விட ஓடிடியில் வெளியான பிறகு படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
- Vinothini Aandisamy
- Updated on: Jun 22, 2025
- 18:18 pm
நடிகர் தனுஷின் குபேரா படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்
Actor Dhanush Kubera Movie OTT Update: நடிகர் தனுஷ் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது குபேரா படம். இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது.
- Vinothini Aandisamy
- Updated on: Jun 21, 2025
- 16:54 pm
OTT Movies: நொடிக்கு நொடி பயம்.. மிரள வைக்கும் திகில் படம்.. ஓடிடியில் பாருங்க!
Best Horror Movies: 2010 ஆம் ஆண்டு வெளியான "தி லாஸ்ட் எக்ஸார்சிசம்" திரைப்படம், பேய் விரட்டுபவராக நடிக்கும் காட்டன் மார்கஸின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது. அமானுஷ்ய சம்பவங்கள், படத்தின் திகில் காட்சிகளையும், அதன் சர்ச்சைக்குரிய போஸ்டர் ஆகியவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
- Petchi Avudaiappan
- Updated on: Jun 20, 2025
- 09:30 am
OTT Movies: சுறாவிடம் சிக்கும் 5 பேர்.. திக் திக் நிமிடங்கள்.. இந்த படம் பாருங்க!
Best Action - Horror Films: பசிபிக் பெருங்கடலில் மாபெரும் சுறாவை வேட்டையாடும் குழுவின் பயங்கரமான அனுபவங்களைச் சொல்லும் கதையாக Under Paris எடுக்கப்பட்டுள்ளது. சிறப்பான நடிப்பும், சுவாரஸ்யமான காட்சிகளும் கொண்ட இப்படம், பிற சுறா படங்களிலிருந்து வேறுபட்ட அனுபவத்தை ரசிகர்களுக்கு அளிக்கிறது.
- Petchi Avudaiappan
- Updated on: Jun 19, 2025
- 08:59 am