AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தவறான புரிதலால் பாதிக்கப்படும் மாற்றுத்திறனாளி தம்பதி… விக்ருதி படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

Vikruthi Movie OTT Update: மலையாள சினிமாவில் வெளியாகி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த படம் விக்ருதி. மலையாள சினிமாவில் வெளியான இந்தப் படம் தற்போது எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் தற்போது பார்க்கலாம்.

தவறான புரிதலால் பாதிக்கப்படும் மாற்றுத்திறனாளி தம்பதி… விக்ருதி படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
விக்ருதிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 01 Mar 2026 19:19 PM IST

மலையாள சினிமாவில் தொடர்ந்து வெளியாகும் படங்கள் சாதாரண மனிதர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியாகி வருகின்றது. அந்த வகையில் மக்களின் இயல்பான வாழ்க்கையை மையமாக வைத்து மலையாள சினிமாவில் உருவாகி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் விக்ருதி. இந்தப் படத்தினை இயக்குநர் எம்சி ஜோசப் இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் நடிகர்கள் சுராஜ் வெஞ்சாரம்மூடு, சௌபின் ஷாஹிர், வின்சி அலோஷியஸ், சுரபி லட்சுமி, மாமுக்கோயா, மமிதா பைஜு, கிரேசி சவுதி, பாலி வல்சன், ஜாபர் இடுக்கி, இர்ஷாத், ரியா சாய்ரா, பாபுராஜ், சுதி கொப்பா, பகத் மானுவல், சுதீர் கரமன, நெபிஷ் பென்சன், மரீனா மைக்கேல் குறிசிங்கல், மேகநாதன், பாலு வர்கீஸ், சிவாஜி குருவாயூர் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.

இந்தப் படம் கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் பிஜிபால் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

விக்ருதி படத்தின் கதை என்ன?

எல்டோவும் (சுராஜ் வெஞ்சாரம்மூடு) அவரது மனைவி எல்சியும் (சுரபி லட்சுமி) காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத தம்பதியர். அவர்களது மகள் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில் இரண்டு இரவுகள் தூக்கமில்லாமல் சென்றது. இதனைத் தொடர்ந்து எல்டோ கொச்சி மெட்ரோ ரயிலில் வீடு திரும்புகிறார். ஆனால் இரண்டு நாட்களாக தூக்கம் இல்லாமல் இருந்ததால் அவர் மெட்ரோவில் அசந்து படத்து தூங்கிவிடுகிறார்.

Also Read… Ravi Mohan: எல்லாத்துக்குமே ஒரே ரியாக்ஷன் தான்.. அந்த ஹீரோவின் நடிப்பை கண்டு வியந்தேன் – ரவி மோகன் சொன்ன விஷயம்!

அதே மெட்ரோவில் ஷார்ஜாவைச் சேர்ந்த ஒரு வெளிநாட்டு பயணியான சமீர் (சௌபின் ஷாஹிர்) எல்டோ குடி போதையில் படுத்து இருப்பதாக நினைத்து, அவரை போட்டோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிடுகிறார். இதனால் எல்டோவை “கொச்சி மெட்ரோ குடிகாரன்” என்று அடையாளப்படுத்திகின்றனர். இதனால் அந்த குடும்பமே பாதிக்கப்படும் நிலையில் இறுதியில் அந்த பிரச்னை எல்லாம் எப்படி சரி ஆனது என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

Also Read…  சூர்யா 46 படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது? வெளியானது அப்டேட்

Follow Us