சூர்யா 46 படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது? வெளியானது அப்டேட்
Suriya 46 Movie Title Update: கோலிவுட் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்தடுத்து மூன்று படங்கள் உருவாகி வருகின்றது. இதில் கருப்பு மற்றும் சூர்யா 46 ஆகிய இரண்டு படங்களும் இந்த 2026-ம் ஆண்டில் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் உருவாகி தற்காலிகமாக சூர்யா 46 என்று பெயர் வைக்கப்பட்டது. இந்தப் படத்தில் நடிகர் சூர்யா நாகனாக நடிக்க அவருடன் இணைந்து நடிகர்கள் மமிதா பைஜூ, ரவீனா டாண்டன் மற்றும் ராதிகா சரத்குமார் உடன் இணைந்து பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வரும் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கி உள்ளார். இவர் இறுதியாக தெலுங்கு சினிமாவில் நடிகர் துல்கர் சல்மானை வைத்து இயக்கிய லக்கி பாஸ்கர் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மெலும் திரையரங்குகளில் சாதனைப் படத்தை லக்கி பாஸ்கர் படம் தொடர்ந்து ஓடிடியில் வெளியாகி சாதனைப் படத்தது குறிப்பிடத்தக்கது.
இப்படி ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த இயக்குநர் உடன் நடிகர் சூர்யா அவரது 46-வது படத்திற்காக கூட்டணி வைத்து அவரது ரசிகர்களிடையே மாபெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரிப்பாளர் நாக் வம்சி தயாரித்துள்ளார். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த 2025-ம் ஆண்டில் தொடங்கி தற்போது முடிவடைந்துள்ளது. படத்தின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் எப்போது வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.




நாளை வெளியாகிறது சூர்யா 46 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்:
சூர்யா 46 படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து வெளியீட்டிற்கான பணிகள் நடைப்பெற்று வரும் நிலையில் படத்திற்கு டைட்டில் உட்பட எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக நாளை 02-ம் தேதி மார்ச் மாதம் 2026-ம் ஆண்டு சூர்யா 46 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Also Read… தனுஷின் கர படத்தின் ரிலீஸ் எப்போது? தயாரிப்பாளர் சொன்ன சூப்பர் அப்டேட்
சூர்யா 46 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
A spectacle in the making. 🤩
A presence you can’t ignore. 🔥#Suriya46 Title & First Look unveils TOMORROW at 10:18 AM! 💥💥@Suriya_offl #VenkyAtluri @_mamithabaiju @realradikaa @TandonRaveena @gvprakash @vamsi84 @NavinNooli @NimishRavi @Banglan16034849 #SaiSoujanya pic.twitter.com/wUPZ9UR3Ht— Sithara Entertainments (@SitharaEnts) March 1, 2026
Also Read… D 56 படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்? வைரலாகும் அப்டேட்