AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கோலாகலமாக நடந்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா திருமணம்.. நெருங்கிய உறவினர்கள் பங்கேற்பு!

Actors Vijay Deverakonda and Rashmika Mandanna Wedding: தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவருக்கும் இன்று இந்து முறைப்படி திருமணம் நடைப்பெற்றது. ரீல் ஜோடி தற்போது ரியல் ஜோடியாக மாறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோலாகலமாக நடந்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா திருமணம்.. நெருங்கிய உறவினர்கள் பங்கேற்பு!
விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 26 Feb 2026 11:10 AM IST

தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் விஜய் தேவரகொண்டா (Actor Vijay Deverakonda). இவர் நாயகனாக அறிமுகம் ஆன ஆரம்ப காலக்கட்டத்தில் இவரது நடிப்பில் வெளியான படங்கள் தொடர்ந்து தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே மட்டுமே கவனத்தை ஈர்த்து வந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா எழுதி இயக்கிய அர்ஜுன் ரெட்டி (Arjun Reddy) படத்தில் நடித்தப் பிறகு விஜய் தேவரகொண்டா பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே பிரபலம் ஆனார் என்றே சொல்லலாம். இந்தப் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்தது. தொடர்ந்து அதிரடியான கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வந்த விஜய் தேவரகொண்டாவை ரசிகர்கள் ரவுடி என்று செல்லமாகவும் அழைப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு கீதா கோவிந்தம் படத்தின் மூலமாஅக முதன்முறையாக இணைந்தது விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஜோடி. இந்தப் படத்தில் இணைந்து நடித்த இவர்களுக்கு இடையே நட்பு ஏற்பட்டு அது பிறகு காதலாக மாறி சில ஆண்டுகளாக டேட் செய்து வந்தனர். இவர்கள் இருவரும் காதலில் இருப்பதாக பல முறை செய்திகள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்த நிலையில் சமீபத்தில் திருமணத்தை அறிவித்தது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Also Read… தளபதி விஜயின் ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் எப்போது? இணையத்தில் வைரலாகும் தகவல்

கோலாகலமாக நடந்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா திருமணம்:

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகர்களாக வலம் வரும் நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ரீல் ஜோடியாக மக்களின் மனதைக் கவர்ந்த இவர்கள் இருவருவரும் இன்று 26-ம் தேதி பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். மேலும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவருக்கும் இந்து முறைப்படி திருமணம் செய்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திருமணத்திற்கு திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Also Read… சூர்யா 46 படத்தின் கிளிம்ஸ் வீடியோ எப்போது வெளியாகும்? வைரலாகும் தகவல்

Follow Us