டெல்லியில் 500 மாணவர்களுக்கு ஒரு கவுன்சிலர்.. மாணவர்களின் மனநலனுக்கு முக்கியத்துவம்!

×

டெல்லியில் 500 மாணவர்களுக்கு ஒரு கவுன்சிலர்.. மாணவர்களின் மனநலனுக்கு முக்கியத்துவம்!

மாணவர்களின் மனநலனைப் பாதுகாக்கும் வகையில், டெல்லி அரசு புதிய மனநலம் மற்றும் நல்வாழ்வுக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘எஹ்சாஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின்படி, பள்ளிகளில் ஒவ்வொரு 500 மாணவர்களுக்கும் ஒரு கவுன்சிலரும், உயர் கல்வி நிறுவனங்களில் ஒவ்வொரு 100 மாணவர்களுக்கும் ஒரு கவுன்சிலரும் நியமிக்கப்பட உள்ளனர். டெல்லியில் கடந்த 2017 முதல் 2021ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், 18 வயதுக்குட்பட்ட 1,284 குழந்தைகள் தற்கொலை செய்துகொண்டதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. அதாவது, ஆண்டுக்கு சராசரியாக 257 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

Esakkiraja Selvarathinam