AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கேங்ஸ்டராக நடிகர் நானி… வெளியானது ப்ளடி ரோமியோ படத்தின் அறிவிப்பு வீடியோ

BLOODY ROMEO Announcement Video | தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நானி. இவர் இன்று பிறந்த நாள் கொண்டாடி வரும் நிலையில் அவரது நடிப்பில் உருவாகும் புதுப் படங்களின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

கேங்ஸ்டராக நடிகர் நானி… வெளியானது ப்ளடி ரோமியோ படத்தின் அறிவிப்பு வீடியோ
நடிகர் நானிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 24 Feb 2026 12:12 PM IST

ரேடியோவில் ஆர்ஜேவாக தனது பணியைத் தொடங்கிய நடிகர் நானி தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் மட்டும் இன்றி தமிழ் மொழிகளிலும் அவ்வபோது படங்களில் நடித்து வருகிறார். தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நடிகர் நானியை அவரது ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் அவரை நேச்சுரல் ஸ்டார் என்று அன்புடன் அழைத்து வருகின்றனர். இவர் தெலுங்கு சினிமாவில் கடந்த 2008-ம் ஆண்டு நாயகனாக நடிக்கத் தொடங்கிய நிலையில் தற்போது 17 ஆண்டுகளைக் கடந்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் தெலுங்கு சினிமாவில் வெளியாகும் படங்கள் தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதன்படி நடிகர் நானியின் நடிப்பில் இறுதியாக கடந்த 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான ஹிட் தி தேர்ட் கேஸ் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து திரையுலகில் நடிகராக மட்டும் இன்றி தயாரிப்பாளராகவும் சிறந்த படங்களை கொடுத்து வருகிறார் நானி. இந்த நிலையில் தற்போது நானியின் நடிப்பில் உருவாக உள்ள புதுப் படத்தின் அறிவிப்பு வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

வெளியானது நானியின் ப்ளடி ரோமியோ படத்தின் அறிவிப்பு வீடியோ:

இந்த நிலையில் இன்று நடிகர் நானி தனது 42-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனை சிறப்பிக்கும் வகையில் அவரது ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாகவும் புதுப் படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் நானியின் நடிப்பில் உருவாக உள்ள படத்திற்கு ப்ளடி ரோமியோ என்ற படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் நடிகர் நானி கேங்ஸ்டராக நடிக்க உள்ளது வீடியோவைப் பார்க்கையில் தெரிகிறது. மேலும் இந்தப் படத்தினை இயக்குநர் சுஜீத் எழுதி இயக்கி உள்ளார். இந்த நிலையில் படத்தின் வீடியோ தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… KH X RK Movie: கமல்ஹாசன் – ரஜினிகாந்தின் ‘KH X RK’ பட ஷூட்டிங் எப்போது தொடங்கும்? – வைரலாகும் தகவல்!

நடிகர் நானி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பாக்கெட் நாவல் படத்தில் நான் வில்லன் இல்லை… பிரபல கன்னட நடிகர் ராஜ் பி. ஷெட்டி சுவாரஸ்ய பேச்சு!