KH X RK Movie: கமல்ஹாசன் – ரஜினிகாந்தின் ‘KH X RK’ பட ஷூட்டிங் எப்போது தொடங்கும்? – வைரலாகும் தகவல்!
KH X RK Movie Shooting Update: கோலிவுட் அனைவரும் எதிர்பார்த்துவரும் பிரம்மாண்ட திரைப்படம்தான் KH X RK. இதில் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து, நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். இப்படத்தின் அறிவிப்புகள் சமீபத்தில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றநிலையில், இப்படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகிவருகிறது.
தமிழ் சினிமாவில் இருபெரும் தூண்களாக இருப்பவர்கள் கமல்ஹாசன் (Kamal Haasan) மற்றும் ரஜினிகாந்த் (Rajinikanth). இவர்கள் தொடர்ந்து பிரம்மாண்ட திரைப்படங்களில் நடித்துவருகின்றனர். அந்தவகையில் இவர்கள் 70ஸ் மற்றும் அதற்கு பிந்தைய காலகட்டத்தில், இருவருமே இணைந்து திரைப்படங்களில் நடித்துவந்தனர். இயக்குநர் கே.பாலசந்தரால் இந்த கூட்டணி முதல் முறையாக இணைந்த நிலையில், தொடர்ந்து சில படங்களில் நடித்துள்ளனர். அந்த வகையில் பின் சில விஷயங்களின் காரணமாக இருவருமே தனித்தனியாக படங்களில் நடிக்க தொடங்கிவிட்டனர். அந்த வகையில் கிட்டத்தட்ட 47 ஆண்டுகளாக எந்த படங்களிலும் இவர்கள் கூட்டணி இணையவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அந்த வகையில் ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ப மீண்டும் இணைந்துள்ளது. இவர்களின் கூட்டணி படமானது தற்காலிகமாக “KH X RK” என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இதை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar) இயக்கவுள்ளார்.
இவர் ஏற்கனவே ரஜினிகாந்துடன் ஜெயிலர் 1 மற்றும் பார்ட் 2 படத்திலும் பணியாற்றியுள்ள நிலையில், கமல்ஹாசனுடன் முதல் முறையாக இணையவுள்ளார். மேலும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் (Red Giant Movies) நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் அறிவிப்பு வீடியோ சமீபத்தில் வெளியாகி பிரம்மாண்ட வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் பற்றிய தகவல் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: ரசிகர்களின் அன்பு.. திருமணத்துக்கு பெயர் வைத்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா ஜோடி!
KH X RK திரைப்படத்தின் ஷூட்டிங் அப்டேட் :
தற்போது ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங்கை முடித்த நிலையில், தற்போது அடுத்த படத்திற்காக தயாராகிவருகிறார். தலைவர் 173 என அழைக்கப்படும் இப்படத்தை இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்க, கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படமானது வித்தியாசமான ஆக்ஷன் கதைக்களத்தில் தயாராகவுள்ள நிலையில், இதன் ஷூட்டிங் 2026 மார்ச் மாதத்தில் தொடங்கவுள்ளது. மேலும் இதன் ஷூட்டிங் 2026ம் ஆண்டு இறுதிக்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதையடுத்ததாகத்தான் ரஜினிகாந்த் KH X RK படத்தில் ஷூட்டிங்கில் இணைவார்.
இதையும் படிங்க: இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தான் உண்மையான ஜாவா சுந்தரேசன் – ஆர்.ஜே.பாலாஜி கலகல பேச்சு
மேலும் கமல்ஹாசனும் அரசியலில் ஒருபுறம் பிசியாக இருக்கும் நிலையில், ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பரீவ் இயக்கத்தில் புது படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங்கை முடித்தபின் அவரும் KH X RK படத்தில் இணைவார் என கூறப்படுகிறது. அதன் காரணமாக இந்த கூட்டணி படத்தின் ஷூட்டிங் வரும் 2027ம் ஆண்டில் தொடங்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது. மேலும் இது அதே 2027ம் ஆண்டில் வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
KH X RK திரைப்படத்தின் ஹூட்டிங் குறித்து வைரலாகும் பதிவு :
– The shoot of #KHxRK is scheduled to begin in 2027, after the completion of #Thalaivar173 and #KH237.
– #KamalHaasan and #Rajinikanth will start shooting only after these projects wrap up.
– The looks revealed in the promo were created exclusively for promotional purposes, and… pic.twitter.com/FI9cyBODk8
— Movie Tamil (@_MovieTamil) February 23, 2026
இப்படமானது கிட்டத்தட்ட ரூ 1000 கோடி பட்ஜெட்டில் தயாராகவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கும் நிலையில், இப்படத்தில் பாடல்கள் மற்றும் பிஜிஎம் போன்றவைகள் தீயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இப்படமானது நிச்சயமாக 2027ம் ஆண்டில் வெளியாகிவிடும் என வட்டாரங்களும் தெரிவிக்கிறது.