AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சவுத் இந்தியன் குயின்.. இந்த புகைப்படத்தில் உள்ள சிறுமி யாரு-னு தெரியுமா?

South Indian Celebrity Childhood Photo: தென்னிந்திய சினிமாவில் 2000ம் ஆரம்பக்கட்டத்திலிருந்து தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக பல நடிகைகள் மற்றும் நடிகைகள் இருக்கிறார்கள். அந்த வகையில் இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுமி யாருனு தெரியுமா?. அது பற்றி பார்க்கலாம்.

சவுத் இந்தியன் குயின்.. இந்த புகைப்படத்தில் உள்ள சிறுமி யாரு-னு தெரியுமா?
தமிழ் நடிகையின் சிறுவயது புகைப்படம்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 23 Feb 2026 08:21 AM IST

இந்திய சினிமாவில் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பலரும் போட்டிபோட்டு சினிமாவில் நடித்துவருகின்றனர். அந்த வகையில் பாலிவுட் சினிமாத்துறை மிகவும் பெரிய வட்டாரத்தில் ஒன்று. அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் 2000ம் ஆண்டு தொடக்கம் முதல் தற்போதுவரை பல நடிகைகள் லீட் கதாநாயகியாகவே நடித்துவருகிறார். அதில் நடிகைகள் நயன்தாரா (Nayanthara), திரிஷா (Trisha) போன்ற நடிகைகளும் அடங்குவார்கள். அவ்விதத்தில் தென்னிந்திய நடிகைகளின் சிறுவயது அடையாளம் தெரியாத புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருவது வழக்கமே. இந்நிலையில் மேலே இருக்கும் புகைப்படத்தில் உள்ள கியூட்டான சிறுமி யாருனு தெரிகிறதா?. இவர் ஒரு சௌந் இந்தியன் குயின். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளிலும் படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். தமிழில் தளபதி விஜய் (Thalapathy Vijay), அஜித் குமார் (Ajith Kumar) மற்றும் சூர்யா (Suriya)போன்ற நடிகர்களுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். மேலும் இவர் தமிழில் சூர்யாவிற்கு ஜோடியாக மூன்றுமுறை நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பெண் லீட் கதாநாயகியாக நடித்து, தென்னிந்திய சினிமாவில் பிரபலமான முதல் நடிகையே இவர்தான். இப்போது இந்த சிறுமி யார் என நினைவிற்கு வந்திருக்கும். இந்த கியூட் சிறுமி வேறுயாருமில்லை நடிகை அனுஷ்கா ஷெட்டிதான் (Anushka Shetty).

இதையும் படிங்க: சூர்யா 47 படம் குறித்து இயக்குநர் சொன்ன விசயம் – வைரலாகும் தகவல்

நடிகை அனுஷ்கா ஷெட்டியின் இன்ஸ்டாகிராம் பதிவு :

நடிகை அனுஷ்கா ஷெட்டி, தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகைகளில் ஒருவராக இருந்துவந்தவர். இவர் ஆரம்பத்தில் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிவந்தவர். பின் சினிமாவின் மீது இருக்கும் ஆர்வத்தினால் கடந்த 2005ம் ஆண்டில் வெளியான சூப்பர் என்ற தெலுங்கு படத்தில் நடித்து கதாநாயகியாக நுழைந்தார். இதையடுத்து சில தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்தார். மேலும் இவருக்கு தமிழில் அறிமுக திரைப்படமாக அமைந்தது ரெண்டு. சுந்தர் சி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார். அந்த வகையில் இவர் பெண் கதாநாயகியாக நடித்து, இவருக்கு வெற்றியை கொடுத்தப்படம் அருந்ததி.

இதையும் படிங்க: புஷ்பா 2 படத்திற்காக ஃபிலிம் ஃபேர் விருது வென்ற அல்லு அர்ஜுன் – வைரலாகும் எக்ஸ் பதிவு

ஹாரர் கதையில் வெளியான இப்படத்தில் ஒரு பெண் லீட் நாயகியாக நடித்து உச்சத்தை அடைந்தார். இதைத் தொடர்ந்து வேட்டைக்காரன், கேடி, சிங்கம் மற்றும் வானம் என பல படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் தற்போதுவரையிலும் பெண் லீட் கதாநாயகியாகவே படங்களில் நடித்திவருகிறார். அந்த வகையில் இவரின் நாடியில் இறுதியாக வெளியான படம் காதி. இப்படம் இவருக்கு கலவையான விமர்சனங்களைக் கொடுத்திருந்தது.