AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

என் நண்பன் ஒரு பைத்தியம்… தயன் ஸ்ரீனிவாசன் பேச்சிற்காக முதலமைச்சர் விஜயிடம் மன்னிப்பு கோரிய அஜு வர்கீஸ்

Actor Aju Varghese says sorry to CM Vijay | மலையாள சினிமாவில் நேற்று விசிட்டர் படத்தின் விழா நடைப்பெற்றது. அந்த விழாவில் நடிகர் தயன் ஸ்ரீனிவாசன் முதலமைச்சர் பதவி ஏற்பது குறித்து நகைச்சுவையாக பேசியதற்காக நடிகர் அஜு வர்கீஸ் விஜயிடம் மண்ணிப்பு கோரியுள்ளார்.

என் நண்பன் ஒரு பைத்தியம்… தயன் ஸ்ரீனிவாசன் பேச்சிற்காக முதலமைச்சர் விஜயிடம் மன்னிப்பு கோரிய அஜு வர்கீஸ்
அஜு வர்கீஸ், முதலமைச்சர் விஜய், தயன் ஸ்ரீனிவாசன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 16 Jul 2026 11:18 AM IST

மலையாள சினிமாவில் பிரபல நடிகரகாக வலம் வரும் நடிகர் தயன் ஸ்ரீனிவாசன் முதலமைச்சராக பதவி ஏற்பது குறித்து காமெடியாக பேசியது சர்ச்சையை கிளப்பிய நிலையில் நடிகர் அஜு வர்கீஸ் அவரது பேச்சிற்காக முதலமைச்சர் விஜயிடம் (Chief Minister Vijay) மன்னிப்பு கோரியது இணையத்தில் வைரலாகி வருகின்றது. நேற்று மலையாள சினிமாவில் விசிட்டர் என்ற படத்தின் விழா நடைப்பெற்றது. அந்த விழாவில் படத்தின் நடிகர்களான ஊர்வசி, நவ்யா நாயர், தியான் ஸ்ரீனிவாசன் மற்றும் சித்தார்த் பரதன் ஆகியோர் நடித்து உள்ளனர். இயக்குநர் ராகுல் முரளீதரன் படத்தை இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் தொடக்க விழாவில் நேற்று நடைப்பெற்றது. அந்த விழாவில் படத்தில் நடித்த நடிகர் தயன் ஸ்ரீனிவாசன் முதலமைச்சர் பதவி ஏற்பு குறித்து நகைச்சுவையாக பேசியுள்ளார்.

அதன்படி அந்த விழாவி தயன் ஸ்ரீனிவாசன் பேசியபோது நான் முதலமைச்சராக பதவி ஏற்கும் போது நடிகை நவ்யா நாயர் புடவை கட்டிக்கொண்டு முதல் வரிசையில் அமர்ந்து பார்ப்பார் என்று கிண்டலாக பேசினார். இவர் முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா குறித்து மறைமுகமாக பேசியுள்ளார் என்பது அனைவருக்கும் புரிந்தது.

தயன் ஸ்ரீனிவாசன் பேச்சிற்காக விஜயிடம் மன்னிப்பு கோரிய அஜு வர்கீஸ்:

அதனைத் தொடர்ந்து அந்த விழாவில் பேசிய நடிகர் அஜு வர்கீஸ், எனது நண்பன் தயன் ஸ்ரீனிவாசன் ஒரு பைத்தியம். நான் சென்னைக்கு செல்ல வேண்டும். முதலமைச்சர் விஜய் சார் அவன் பேசியதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து இந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Also Read… சினிமாவில் புது அவதாரம் எடுக்கும் நடிகர் அஜித் குமார்? வைரலாகும் தகவல்

இணையத்தில் வைரலாகும் தயன் ஸ்ரீனிவாசன் பேச்சு:

இணையத்தில் வைரலாகும் அஜு வர்ஜீஸ் பேச்சு:

Also Read… ஜன நாயகன் பட ரிலீஸ் தேதியில் புது மாற்றம்… வைரலாகும் தகவல்

Follow Us