ஜன நாயகன் பட ரிலீஸ் தேதியில் புது மாற்றம்… வைரலாகும் தகவல்
Jana Nayagan Movie Release Update | தமிழ் சினிமாவில் அடுத்ததாக மிகவும் பிரமாண்டமாக வெளியாக உள்ள படம் ஜன நாயகன். இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி குறித்த தகவல் தொடர்ந்து சினிமா வட்டாரங்களில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தமிழ் சினிமாவில் அடுத்ததாக மிகவும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஜன நாயகன். தளபதி விஜயின் நடிப்பில் இறுதியாக உருவான இந்தப் படம் கடந்த 6 மாதங்களாக சென்சார் பெறுவதற்காக போராடி வந்தது. தொடர்ந்து சென்சார் பிரச்சனைகள் நீண்டு வந்த நிலையில் தற்போது படத்திற்கு சென்சார் கிடைத்தது மட்டும் இன்றி படத்தின் ரிலீஸ் தொடர்பான அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வகையில் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியது தணிக்கை குழு சமீபத்தில். மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்டை படக்குழு வெளியிட்டு இருந்தது. மேலும் இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டை படக்குழு தற்போது வரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் படத்தின் விநியோக உரிமையை பெற்ற நிறுவனங்கள் தங்களது பக்கங்களில் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் வெளி நாடுகளில் ஜன நாயகன் படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கி தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றது. மேலும் ஜூலை மாதம் 24-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் தற்போது வெளியான தகவலின்படி ஜன நாயகன் படம் வருகின்ற 23-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டே வெளியாகும் என்று தெரிவிக்கப்படுகின்றது.




ஜன நாயகன் பட ரிலீஸ் தேதியில் புது மாற்றம்:
தொடக்கத்தில், வியாழக்கிழமை வெளியீட்டை விட ஜூலை 24-ஆம் தேதி வெளியிடுவது வெளிநாடுகளில் இன்னும் சிறப்பான தொடக்க வசூலைப் பெற்றுத்தரும் என்று கருதி, வெளிநாட்டு விநியோகஸ்தர்கள் அந்தத் தேதியைக் கோரியிருந்தனர். ஆனால், உள்நாட்டு விநியோகஸ்தர்கள் ஜூலை 23-ஆம் தேதியே படத்தை வெளியிட விரும்பினர்; இதன் மூலம் கூடுதல் ஒரு நாள் வருவாயையும், வெளியீட்டு வார இறுதியில் கூடுதல் கால அவகாசத்தையும் பெற முடியும் என்பது அவர்களின் நோக்கமாக இருந்தது. தளபதி விஜய் தனது திரையுலகப் பயணத்தின் இறுதிப் படமான இதில் விடைபெறத் தயாராகி வருகிறார். இப்படம் இணையத்தில் கசிந்திருந்த போதிலும், இது பல வசூல் சாதனைகளை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read… இறுதிக்கட்ட படப்பிடிப்பில் விறுவிறுப்பு காட்டும் தனுஷின் ஓம் படம் – வைரலாகும் தகவல்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
.@Jagadishbliss’s INSTA STORY 😎🔥
Jana Nayagan – July 23rd.#Jananayagan pic.twitter.com/iHGaJuNztn— Prasaanth (@prasaanth_07) July 15, 2026
Also Read… சென்னை 28 பாகம் 3 படத்தின் அப்டேட் என்ன? வைரலாகும் புது தகவல்