கோலிவுட் சினிமாவில் வரிசைக்கட்டும் தெய்வீகப் படங்கள்!
Kollywood is entering the era of divine storytelling | தமிழ் சினிமாவில் இந்த 2026-ம் ஆண்டில் அடுத்தடுத்து தொடர்ந்து தெய்வீகம் சார்ந்த படங்கள் உருவாகி திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. அந்தப் படங்களை தற்போது இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஜானர் அதிக அளவில் பிரபலமாகி அது தொடர்பான படங்கள் தொடர்ந்து வெளியாவது வழக்கமாக உள்ளது. ஆக்ஷன் படங்கள் ஒரு காலத்தில் தொடர்ந்து வெற்றியடையும். ரொமாண்டிக் படங்கள் ஒரு காலத்தில் தொடர்ந்து வெற்றி அடையும், மற்று நேரத்தில் ஃபேமிலி செண்டிமெண்ட் படங்கள், ஒரு காலத்தில் பேய் படங்கள் போல மற்றொரு காலத்தில் சாமிப் படங்களும் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. இந்த ஜானர்களில் எந்த ஜானர் ஒரு முறை வெற்றியைக் காண்கிறதோ அந்த ஜானரில் வரிசையாக தொடர்ந்து படங்கள் திரையரங்குகளில் வெளியாவதை வழக்கமாக வைத்து உள்ளது. அந்த வகையில் தற்போது கோலிவுட் சினிமாவில் தெய்வீகம் சார்ந்த படங்கள் வரிசையாக வெளியாகி வருகின்றது. அந்த படங்களைக் குறித்து தற்போது பார்க்கலாம்.
அதன்படி தமிழ் சினிமாவில் இந்த 2026-ம் ஆண்டின் தொடக்கத்தில் தெய்வீகம் சார்ந்த படமாக உருவாகி திரையரங்குகளில் வெளியானது நடிகர் சூர்யாவின் கருப்பு படம். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து தெய்வீகம் சார்ந்த படங்கள் தற்போது கோலிவுட் சினிமாவில் உருவாகி வருகின்றது.




கோலிவுட் சினிமாவில் வரிசைக்கட்டும் தெய்வீகப் படங்கள்:
அந்த வரிசையில் தற்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நயன்தாரா மீண்டும் அந்தத் தெய்வீக சக்தியாகத் தோன்றுகிறார். முதல் பாகத்தின் அபார வெற்றிக்குப் பிறகு, அந்தத் தெய்வமாக மீண்டும் வருகிறார். அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் கிராமப்புற பின்னணியிலான அதிரடித் திரைப்படமான சேயோன், நம்பிக்கை மற்றும் வெகுஜன ரசனைக்கு ஏற்ற பொழுதுபோக்கு ஆகியவற்றை இணைத்து, முருகப்பெருமானைப் பற்றிய வலுவான குறிப்புகளைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள பிரம்மாண்டமான வரலாற்றுத் திரைப்படத்தில் தனுஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். தமிழ்க் கடவுளான முருகப்பெருமானை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம், கலாச்சார வேர்களைக் கொண்ட ஒரு வலிமையான திரையனுபவத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோலிவுட்டின் அடுத்த கட்டம், நம்பிக்கை, வரலாறு மற்றும் தொன்மக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களையே சார்ந்திருக்கப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… Ramayana: ரன்பீர் கபூரின் ராமாயணா பட ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது இருக்கும்? – வைரலாகும் தகவல்!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Kollywood is entering the era of divine storytelling. ⚡
🖤 #Karuppu – #Suriya brought Karuppasamy to life on screen, delivering one of the biggest blockbusters of the year.
🪔 #MookuthiAmman2 – #Nayanthara returns as the divine force once again. After the phenomenal success of… pic.twitter.com/jageIkwCYT
— Movie Tamil (@_MovieTamil) July 10, 2026
Also Read… ரெட்ரோ படத்தில் நான் செய்ய விரும்பிய அனைத்தையும் செய்தேன் – சந்தோஷ் நாராயணன்