ரெட்ரோ படத்தில் நான் செய்ய விரும்பிய அனைத்தையும் செய்தேன் – சந்தோஷ் நாராயணன்
Music Director Santhosh Narayanan Recent Interview | தென்னிந்திய சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருகிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் தான் இசையமைப்ப படங்கள் குறித்து பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தென்னிந்திய மொழிகளில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். இவரது இசையில் வெளியாகும் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. சினிமாவில் பல இசையமைப்பாளர்களிடம் பணியாற்றிய சந்தோஷ் நாராயணன் கடந்த 2012-ம் ஆண்டு இயக்குநர் பா.ரஞ்சித் எழுதி இயக்கிய அட்டகத்தி என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் இயக்குநர் மற்றும் நடிகர் அறிமுகம் ஆவது மட்டும் இன்றி இசையமைப்பாளர் உட்பட பலரும் அறிமுகம் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராய்ணன் அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பலப் படங்களுக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து தென்னிந்திய மொழிகளிலும் பிசியான இசையமைப்பாளராக உள்ள சந்தோஷ் நாராயணன் இசையில் கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் அடுத்தடுத்து மூன்று படங்கள் வெளியானது. அதில் ஒன்று தான் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ படம் ஆகும். மூன்று படங்களில் இந்த ரெட்ரோ படத்தின் ஆல்பம் தமிழ் சினிமா ரசிகரக்ளிடையே மட்டுமின்றி தென்னிந்திய மொழி ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சமீபத்தில் அளித்தப் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.




ரெட்ரோ படத்தில் நான் செய்ய விரும்பிய அனைத்தையும் செய்தேன்:
அந்தப் பேட்டியில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசியதாவது, எனக்கு நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான ரெட்ரோ படத்தின் ஆல்பம் மிகவும் பிடிக்கும். அந்த ஆல்பத்தில் நான் செய்ய விரும்பிய அனைத்தையும் செய்தேன். அதனால் அது மிகவும் நெறுக்கமானதாக இருந்தது. இந்த நிலையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் சேயோன் படத்தில் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அது இன்னும் வெளியாகவில்லை. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்று இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசியது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் வைரலாகும் சந்தோஷ் நாராயணன் பேச்சு:
#SanthoshNarayanan: I like the #Retro album a lot.. I did everything i wanted to do in that album.. Currently I love #Seyon.. It’s not released yet.. it’s a work in progress.. Before that, Vadachennai.. Gypsy.. Gulu Gulu..pic.twitter.com/jNb3XM0m6l
— Laxmi Kanth (@iammoviebuff007) July 9, 2026
Also Read… திரையரங்குகளில் 50 நாட்களைக் கடந்தது த்ரிஷ்யம் 3 – மோகன்லால் நெகிழ்ச்சிப் பதிவு