ஒரு காலத்தில் மாதம் 1 லட்சம் சம்பளம் பெறுவது பலரின் கனவாக இருந்தது. ஆனால் இன்று பெருநகரங்களில் வாழும் பல இளைஞர்கள், அந்த வருமானம் இருந்தும் மாத இறுதியில் சேமிப்பு இல்லாமல் தவிக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் "லைஃப்ஸ்டைல் க்ரீப்" எனப்படும் வாழ்க்கை முறைச் செலவுகளின் அதிகரிப்பாகும். சம்பளம் உயரும்போது வீடு, மொபைல், சுற்றுலா, பொழுதுபோக்கு உள்ளிட்ட செலவுகளும் உயர்கின்றன. இதனால் வருமானம் அதிகரித்தாலும் சேமிப்பு அதிகரிப்பதில்லை.