AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அரசு பேருந்தை திருடிச் சென்ற போதை ஆசாமி.. ஐதராபாத்தில் பரபரப்பு!

Drunken Man Abducted Government Bus | தெலங்கானா மாநிலம், ஐதராபாத் பகுதியில் உள்ள ஒரு பேருந்து நிலையத்தில் இருந்து போதை ஆசாமி ஒருவர் அரசு பேருந்தை கடத்திச் சென்றுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி பேசுபொருளாக மாறியுள்ளது.

அரசு பேருந்தை திருடிச் சென்ற போதை ஆசாமி.. ஐதராபாத்தில் பரபரப்பு!
பேருந்தை கடத்தியவர்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 10 Jul 2026 18:34 PM IST

ஐதராபாத், ஜூலை 10 : தெலங்கானா (Telangana) மாநிலம், ஐதராபாத்தில் (Hyderabad) மதுபோதையில் ஒருவர் அரசு பேருந்தை கடத்திச் சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 21 கிலோ மீட்டர் தூரம் பேருந்தை ஓட்டிச் சென்ற அவர், சுங்கச்சாவடியில் மோதி விபத்தை ஏற்படுத்திய நிலையில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இந்த சுவாரஸ்ய சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலம்.

மது போதையில் அரசு பேருந்தை கடத்திச் சென்ற நபர்

தெலங்கானா மாநிலம், ஜஹொன் மாவாட்டம், சென்னுரு கிராமத்தை சேர்ந்தவர் ஜிதபோனியா வெங்கையா என்ற நபர். இவர் ஜேசிபி ஆப்பரேட்டராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று (ஜூலை 10, 2026) நல்ல மதுபோதையில் ஜஹொன் மாவட்ட பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு சில பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையில், அங்கிருந்த அரசு பேருந்து ஒன்றை ஓட்டிச் சென்றுள்ளார்.

இதையும் படிங்க : உங்களிடம் 2000 ரூபாய் நோட்டுகள் இருக்கா? கவலை வேண்டாம்.. மாற்றுவது எப்படி? ஆர்.பி.ஐ விளக்கம்

21 கிலோ மீட்டர் தூரம் பேருந்தை ஓட்டிச் சென்ற நபர்

மதுபோதையில் பேருந்தை ஓட்டிச் சென்ற அவர், அந்த அரசு பேருந்தின் மூலம் சுமார் 21 கிலோ மீட்டர் தூரத்திற்கு பயணம் செய்துள்ளார். அப்போது அவர், சிங்கராஜுபள்ளி பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் பேருந்தை மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த சமவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஆஸ்திரேலியாவில் வந்தே மாதரம் பாடல் இசைத்து பிரதமர் மோடிக்கு வரவேற்பு – வைரலாகும் வீடியோ

கைது செய்து சிறையில் அடைத்த போலீசார்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அரசு பேருந்தை மீட்ட நிலையில், அதனை திருடிச் சென்ற போதை ஆசாமியை கைது செய்தனர். பின்னர் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அவரை சிறையில் அடைத்தனர். மதுபோதையில் போதை ஆசாமி ஒருவர் அரசு பேருந்தை திருடிச் சென்ற சம்பவம் அந்த பகுதியில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Follow Us