ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தின் ஆடியோ லாஞ்ச் எங்கு எப்போது நடைபெறும்? வைரலாகும் தகவல்
Actor Superstar Rajinikanths Jailer 2 Movie Audio Launch Update Here | தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஜெயிலர் 2. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஜெயிலர் 2. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்த நிலையில் படத்தின் வெளியீட்டிற்கான போஸ்ட் புரடெக்ஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. அது தொடர்பான தகவல்களும் அவ்வபோது சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
ஜெயிலர் படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் நெல்சன் திலீப் குமார் தான் இந்த இரண்டாவது பாகத்தையும் எழுதி இயக்கி உள்ளார். முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் பலர் இந்த இரண்டாம் பாகத்திலும் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படம் வருகின்ற 15-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையில் படம் தொடர்பான தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.




ஜெயிலர் 2 படத்தின் ஆடியோ லாஞ்ச் எங்கு எப்போது நடைபெறும்?
தளபதி விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்திற்கு மலேசியாவில் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது போலவே, ஜெயிலர் 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் அங்கு நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும், இதற்கான இறுதி முடிவு நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடமே உள்ளது. திரையரங்க வெளியீட்டிற்கு இன்னும் நீண்ட காலம் இருப்பதால், இதற்கான அவகாசம் உள்ளது என்றும் தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read… Vishnu Vishal: கட்டா குஸ்தி 2 வெற்றி.. விஷ்ணு விஷாலுக்கு பிக் கிஃப்ட் கொடுத்த தயாரிப்பாளர்!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Jailer2 BUZZ – Attempts are happening for the audio launch to take place in Malaysia 🇲🇾, like #JanaNayagan happened there with #ThalapathyVijay. However, the final nod is with our #Thalaivar #SuperstarRajinikanth. There’s still a long way to go before the theatrical release, so… pic.twitter.com/ZeCOZG7RfZ
— Movies Singapore (@MoviesSingapore) July 9, 2026
Also Read… கொடைக்கானலில் அய்யனார் துணை சீரியல் குடும்பம்.. இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்!