AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

துல்கர் சல்மானின் 41-வது படத்தின் டைட்டில் இதுதான்… வெளியானது அப்டேட்!

Dulquer Salmaans 41st film title | பான் இந்திய மொழிகளில் பிரபல நடிகராக உள்ளவர் நடிகர் துல்கர் சல்மான். இவரது நடிப்பில் 41-வது படமாக உருவாகி வரும் படத்தின் தலைப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அது ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

துல்கர் சல்மானின் 41-வது படத்தின் டைட்டில் இதுதான்… வெளியானது அப்டேட்!
ஸ்ரீ ஸ்ரீ படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 10 Jul 2026 11:37 AM IST

மலையாள சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக உள்ளவர் நடிகர் துல்கர் சல்மான். கடந்த 2012-ம் ஆண்டு முதல் மலையாள சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் உச்ச நடிகர் மம்முட்டியின் மகனாக இவர் சினிமாவில் நடித்து வந்தாலும் தொடர்ந்து தனது கடின உழைப்பின் காரணமாக மலையாள சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளில் முன்னணி நட்சத்திரமாக மாறியுள்ளார். தொடந்து மலையாள மொழியில் மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகின்றார். இந்தப் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அடுத்தடுத்து படங்கள் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து படங்களில் நடிப்பது, படங்களை தயாரிப்பது என்று சினிமாவில் பிசியாக உள்ள துல்கர் சல்மான் தற்போது நடித்து வரும் படங்கள் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.

துல்கர் சல்மானின் 41-வது படத்தின் டைட்டில் இதுதான்:

நடிகர் துல்கர் சல்மானின் நடிப்பில் 41-வது படமாக தெலுங்கு மொழியில் உருவாகி வருகின்றது. இந்தப் படத்தில் நடிகர் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து உள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ரம்யா கிருஷ்ணன், ஜெகபதி பாபு மற்றும் தீக்ஷித் ஷெட்டி ஆகியோர் நடித்து உள்ளனர் மேலும் இந்தப் படத்தை இயக்குநர் ரவி நெலகுடிதி எழுதி இயக்கி உள்ளார். இந்த நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வந்த நிலையில் படத்தின் டைட்டிலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தப் படத்திற்கு தற்போது ஸ்ரீ ஸ்ரீ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… விஜய் சேதுபதியின் ட்ரெய்ன் படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ

நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… இதுதான் ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் தேதியா? வைரலாகும் தகவல்

Follow Us