AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திரைத்துரையில் 14 ஆண்டுகளை நிறைவு செய்த துல்கர் சல்மான்… கொண்டாடும் திரையுலகினர்!

14 Years Of Dulquer Salman: மலையாள சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய அளவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான். இவர் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைடைந்துள்ள நிலையில் திரையுலகினர் கொண்டாடி வருகின்றனர்.

திரைத்துரையில் 14 ஆண்டுகளை நிறைவு செய்த துல்கர் சல்மான்… கொண்டாடும் திரையுலகினர்!
துல்கர் சல்மான்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 03 Feb 2026 19:23 PM IST

மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் மம்முட்டியின் மகன் தான் நடிகர் துல்கர் சல்மான். மம்முட்டி திரையுலகில் நடிக்கத் தொடங்கி 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆன நிலையில் அவரது மகன் துல்கர் சல்மான் திரைத்துறையில் நடிக்கத் தொடங்கி இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இவர் சினிமாவில் நடிக்கத் தொடங்கி மொத்தமாகவே 14 ஆண்டுகள் தான் ஆகி இருந்தாலும் தொடர்ந்து மலையாள சினிமாவில் மட்டும் இன்றி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார். அதன்படி நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் மொத்தம் மூன்று படங்கள் திரையரங்குகளில் வெளியானது. இதில் ஒரு படத்தில் அவர் கேமியோ ரோலில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் தற்போது அடுத்தடுத்து மூன்று படங்கள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. அதன்படி தெலுங்கு சினிமாவில் இரண்டு படங்கலும் மலையாள சினிமாவில் ஒரு படத்திலும் நடிகர் துல்கர் சல்மான் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் துல்கர் சல்மான் தனது படங்களுக்காக மட்டும் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்ப்பது மட்டும் இன்றி அவரின் கதைத் தேர்வைப் பார்த்தும் மக்கள் வியந்து வருகின்றனர். எந்த அளவிற்கு அவரின் கதை தேர்வை மக்கள் நம்புகின்றனர் என்றால் துல்கர் சல்மான் ஒரு படத்தில் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்தால் அது நிச்சயமாக நன்றாக இருக்காது என்று ரசிகர்கள் நம்பும் அளவிற்கு தற்போதைய சூழல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

துல்கர் சல்மானை கொண்டாடும் திரையுலகினர்:

இந்த நிலையில் நடிகர் துல்கர் சல்மான் திரையுலகில் அறிமுகம் ஆகி 14 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அவர் தற்போது நடித்து வரும் ஐ யம் கேம் படக்குழுவினரும், துல்கர் சல்மான் 41 படக்குழுவினர் போஸ்டர் மற்றும் வீடியோ வெளியிட்டு தங்களது வாழ்த்துகளை துல்கர் சல்மானுக்கு தெரிவித்து வருகின்றனர். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… பராசக்தி படம் பார்த்து வேதனைப்பட்டேன் – நீதிபதி கருத்து – என்ன காரணம்?

துல்கர் சல்மானின் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… சியான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.. துருவ நட்சத்திரம் படம் ரிலீஸ் குறித்து கௌதம் வாசுதேவ் மேனன் அப்டேட்!

Follow Us