AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

எழுத்தாளர் தமிழ் பிரபா உடன் இணையும் ஹரிஷ் கல்யாண் – வைரலாகும் தகவல்

Harish Kalyan New Movie Update: தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நடிகராக வலம் வருகிறார் நடிகர் ஹரிஷ் கல்யாண். அவரது நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படம் குறித்து தற்போது தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

எழுத்தாளர் தமிழ் பிரபா உடன் இணையும் ஹரிஷ் கல்யாண் – வைரலாகும் தகவல்
ஹரிஷ் கல்யாண்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 02 Feb 2026 15:19 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் நடிகராக நடித்து வருகிறார் நடிகர் ஹரிஷ் கல்யாண். இவர் நாயகனாக அறிமுகம் ஆன போது பெரிய அளவில் மக்களிடையே நல்ல விமர்சனம் கிடைக்காத நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு சின்னத்திரையில் ஒளிபரப்பான பிக்பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சியில் வைல்கார்ட் போட்டியாளராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் ஹரிஷ் கல்யாண் கலந்துகொண்ட பிறகு மக்களிடையே அவர் மீதான எண்ணம் மாறியது. மேலும் இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தாராள பிரபு, ஓ மணபெண்ணே, பார்க்கிங், லப்பர் பந்து மற்றும் டீசல் ஆகியப் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதில் இறுதியாக கடந்த 2025-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ம் தேதி நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான டீசல் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் வெளியான இந்தப் படம் தற்போது ஓடிடியிலும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இதனைத் தொடர்ந்து அவர் எந்தப் படத்தில் நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

எழுத்தாளர் தமிழ் பிரபா உடன் இணையும் ஹரிஷ் கல்யாண்:

இந்த நிலையில் நடிகர் ஹரிஷ் கல்யாண் அடுத்தப் படத்திற்காக யாருடன் இணைய உள்ளார் என்பது குறித்து தகவல்கள் சினிமா வட்டாரங்களில் வைரலாகி வருகின்றது. அதன்படி இந்தப் படத்தை பிரபல எழுத்தாளர் தமிழ் பிரபா இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் முன்னதாக தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற சார்ப்பட்டா பரம்பரை மற்றும் ப்ளூ ஸ்டார் ஆகியப் படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… Abhishan Jeevith: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு நன்றி சொல்ல விரும்புகிறேன் – அபிஷன் ஜீவிந்த்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… ஏப்ரல் மாதம் வெளியாகிறதா சூர்யாவின் கருப்பு படம்? வைரலாகும் தகவல்

Follow Us